For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்யாணத்தை கடைசி நேரத்தில் நிறுத்திய மணமகன் - ஏழைகளுக்கு உணவளித்த மணமகள்

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: அமெரிக்காவில் கடைசி நேரத்தில் திருமணத்தை மணமகன் நிறுத்தியதால், மணப்பெண் 100க்கும் மேற்பட்ட ஏழைகளை அழைத்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தினை அவர்களுக்கு அளித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த குய்ன் என்ற பெண்ணுக்கு நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்காக ஒரு 4 ஸ்டார் ஹோட்டலில் அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டிருந்தது.

Homeless fed from cancelled wedding

ஆனால் கடைசி நேரத்தில் போன் பண்ணிய மணமகன் திருமணத்தை நிறுத்தும்படி கூறிவிட்டார். இதனால் மணப்பெண்ணும் அவரது தாயும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பல லட்சம் செலவு செய்து ஏற்பாடு செய்திருந்த அனைத்து ஏற்பாடுகளையும் வீணடிக்க அவர்கள் விரும்பவில்லை.

இதனால் அந்த நகரத்தில் இருக்கும் வீடற்ற 120 ஏழைகளை 4 நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து, திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்தர உணவுகளை சாப்பிட செய்து மகிழ்ந்துள்ளனர். திருமணம் நின்ற போதிலும் மணப்பெண் மற்றும் அவரது அம்மாவின் இந்த உயர்வான செயல் பலரது பாராட்டுதலை பெற்றுவருகிறது.

English summary
After a-groom-to-be called off his wedding, the deserted bride's family decided to do something good with the huge amount of food that had already been ordered and paid for.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X