ஜெயிலுக்குள் இருந்தாலும் மக்களிடம் பேசிய இம்ரான் கான்! அதிர்ந்துபோன பாகிஸ்தான் ராணுவம்! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் நாட்டில் சிறையில் இருக்கும் இம்ரான் கானை தேர்தல் பிரச்சாரங்களில் பேச வைத்துள்ளனர். இது வரும் காலங்களில் தேர்தல் குறித்த மிகப் பெரிய கேள்வியை எழுப்புகிறது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த பிப்.8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கி 3 நாட்கள் முடிந்த பிறகும் இன்னுமே கூட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

How AI and Deepfakes become political weapon in Pakistan elections and helped Imran Khan

இருப்பினும், முதற்கட்ட முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது இம்ரான் கான் கட்சியே முன்னிலையில் உள்ளது. இருப்பினும், அவரை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் திரைமறைவில் நடந்து வருகிறது.

பாகிஸ்தான் தேர்தல்: இது ஒரு பக்கம் இருக்க இந்த முறை நடந்த பாகிஸ்தான் தேர்தல் ரொம்பவே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த முறை அங்கே மும்முனை போட்டி நிலவிய நிலையில், அதில் இம்ரான் கான் கட்சிக்கு மட்டும் பல சிக்கல்கள் இருந்தது. குறிப்பாக இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரால் பிரச்சாரத்தில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியவில்லை. அப்படி இருந்தும் அவரது கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதற்கான காரணம் சுவாரசியமானது

இம்ரான் கான் சிறையில் இருந்த நிலையில், பிரச்சாரத்திற்கு உதவ அவரது கட்சியினர் தொழில்நுட்பம் பக்கம் திரும்பினர். உலகமே அலறும் ஏஐ மற்றும் டீப் பேக் தொழில்நுட்பங்களைக் கண்டு அலறும் நிலையில், அதையே இம்ரான் கான் கட்சியினர் துணைக்கு அழைத்துக் கொண்டு தேர்தலைச் சந்தித்துள்ளனர். பிரச்சார காலத்தில் இம்ரான் கானின் டீப் பேக் வீடியோக்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின.

ஏஐ வீடியோ: அவர் சிறையில் இருந்த நிலையில், தனது கட்சி ஆதரவு பெற்றவர்களுக்கு வாக்களிக்குமாறு இம்ரான் கான் பேசுவது போன்ற வீடியோக்கள் அந்நாட்டின் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. வீடியோவை டீப் பேக் மூலம் உருவாக்கிய அவர்கள், ஆடியோவுக்கு ஏஐ பக்கம் திரும்பினர். அப்படியே தத்ரூபமாக அவர் பேசுவது போன்ற வீடியோக்கள் பரவின. அதுவும் தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற வீடியோக்கள் அதிகரிக்கவே செய்தது.

இம்ரான் கான் மட்டுமின்றி பல அரசியல் தலைவர்களின் வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டானது. தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற வீடியோக்கள் அதிகரித்தே வந்தன. அந்நாட்டில் உள்ள சில ஊடகங்கள் அவை உண்மை என்று நம்பி அதை ஒளிபரப்பவும் செய்தன. அந்தளவுக்குப் பல வீடியோக்கள் தத்ரூபமாக இருந்தன. இதுபோன்ற வீடியோவுக்கு பின்னால் இம்ரான் கான் கட்சியே இருப்பதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். இருப்பினும், அவர்கள் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

தேர்தல் ஆயுதம்: அக்கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படும் ஏஐ வீடியோக்களில் அவை ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை இடதுபுறம் மேலே குறிப்பிடுகிறார்கள். ஆனால், யார் என்றே தெரியாதவர்கள் வெளியிடும் வீடியோக்களில் இதுபோன்ற எச்சரிக்கை வாசகங்கள் எதுவுமே இருப்பதில்லை. இதுவே அங்கே பிரச்சார சமயத்தில் போலி செய்திகள் பரவ காரணமாக இருந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியாகத் தாமதமான போது மற்றொரு டீப் பேக் வீடியோவை இம்ரான் கான் கட்சியினர் வெளியிட்டனர். அதில் "லண்டன் பிளான் தோல்வியடைந்துவிட்டது. அதற்கு மக்களாகிய நீங்கள் தான் காரணம்.. பாகிஸ்தான் மக்கள் ஷெரீப்பை நம்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. உங்களின் பங்களிப்பால் லண்டன் பிளான் படுதோல்வி அடைந்துள்ளது" என்று கூறுவது போல இருந்தது.

இந்த டீப் பேக் தொழில்நுட்பம் மூலமாகவே சிறையில் இருக்கும் இம்ரான் கானை திரையில் கொண்டு வந்து மக்களை நம்ப வைத்துள்ளனர். அதாவது இதைத் தேர்தல் ஆயுதமாகவே அவர்கள் பயன்படுத்தியுள்ளனர் வரும் காலங்களில் ஏஐ தான் உலகெங்கிலும் சுதந்திரமான தேர்தல்களுக்கு மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அர்ஜெண்டினா மற்றும் தைவானில் ஏஐ மூலம் போலியான வீடியோக்கள் பரவி வருகிறது. மேலும், பல நாடுகளில் அது அச்சுறத்தலை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+