For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"மாட்டுக்கறி கிம்".. நிலைமை மோசம்.. சுருண்டு விழும் வடகொரியா மக்கள்.. எங்கும் "ஹெர்பல்" மயம்.. ஏன்?

ஹெர்பல் டீயை குடித்து கொரோனாவை விரட்டுகிறார்கள் வடகொரிய மக்கள்

Google Oneindia Tamil News

பியோங்யாங்: வடகொரியாவில் நிலைமை சரியில்லை.. நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டு அதிபர் கிம், அடுத்து என்ன செய்ய போகிறாரோ என்ற கவலை மக்களை சூழ்ந்துள்ளது..!

உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.. இது ஒரு வித்தியாசமான நாடு.. அதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்..

அடிக்கடி அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும்.. அடிக்கடி காணாமல் போய்விடுவார்.. எங்கே இருக்கிறார் என்றே யாராலுமே கண்டுபிடிக்க முடியாது..!

 20 லட்சம் பேருக்கு கொரோனா இருந்தால் என்ன.. அணு ஆயுத சோதனைக்கு ரெடியாகும் வடகொரியா.. பரபர பின்னணி 20 லட்சம் பேருக்கு கொரோனா இருந்தால் என்ன.. அணு ஆயுத சோதனைக்கு ரெடியாகும் வடகொரியா.. பரபர பின்னணி

மாட்டுக்கறி

மாட்டுக்கறி

பிறகு அவரே மக்கள் முன்பு திடீரென கேஷூவலாக தோன்றுவார்.. மறுபடியும் அவரே காணாமல் போவார்.. நாட்டில் பொருளாதாரத் தடை, வறுமை, பஞ்சம், பசி, நோய்தொற்று, பட்டினி, எது நடந்தாலும் கவலைப்படமாட்டார்.. ஆனால் இவர் மட்டும் எந்நேரமும் ஜாலியாக மாட்டுக்கறி சாப்பிட்டு கொண்டே இருப்பார்.. நாட்டில் அதிக அளவு வறுமை உள்ளது என்று மக்கள் கண்ணீர் வடித்தால், "எல்லாரும் 2025ம் ஆண்டு வரை குறைவாக சாப்பிடுங்க.. ஒருநாளைக்கு ஒரு வாழைப்பழம் மட்டும் சாப்பிடுங்க" என்று கேஷூவலாக அட்வைஸ் தருவார்.

 தொற்று பாதிப்பு

தொற்று பாதிப்பு

2 வருடத்துக்கு முன்பு கொரோனாவால் உலகமே சிக்கி கொண்டது.. கொரோனா நோய்த் தொற்று இல்லாத நாடே இல்லை என்ற அளவுக்கு வைரஸ் பரவியிருந்தது.. நோயை கட்டுப்படுத்துதல், தடுப்பூசிகள் என்று உலகமே பரபரத்து கிடந்தபோது, வடகொரியாவில் இருந்து மட்டும் சத்தமே வரவில்லை.. தங்கள் நாட்டை இழுத்து பத்திரமாக பூட்டி கொண்டது.. "எங்கள் நாட்டில் கொரோனா இல்லை.. நாங்கள் எப்பவுமே சேஃப்" என்று கூலாக பதில் சொன்னார் கிம்.. அதுவும் உலக சுகாதார அமைப்பிடமே தெரிவித்துவிட்டார்.

 தடுப்பூசி வேண்டாம்

தடுப்பூசி வேண்டாம்

எனினும் லட்சக்கணக்கான தடுப்பூசிகளை சீனா வடகொரியாவுக்கு அனுப்பியது.. உடனே கிம், "யாருக்கு தடுப்பூசி தேவையோ, அவங்களுக்கு போய் போடுங்க" என்று சொல்லி, அந்த தடுப்பூசிகளை, அப்படியே திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்.. கடைசிவரை ஒருத்தருக்கும் தடுப்பூசியே போடவில்லை.. உண்மையை சொல்லப்போனால், கொரோனா தொற்றின் காரணமாக இருக்கும் இடம் தெரியாமல் திரைமறைவு வாழ்க்கையை நடத்தி கொண்டு வந்தது வடகொரியா...

 ஹெர்பல் டீ

ஹெர்பல் டீ

இப்போது விஷயம் என்னவென்றால், வடகொரியாவையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.. அங்கு கடந்த வாரம் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இப்போது ஒரே வாரத்தில், 20 லட்சத்தை நெருங்கிவிட்டதாம் பாதிப்பு.. இதை கேட்டதும் கிம் டென்ஷன் ஆவார் என்று பார்த்தால், லாக்டவுன் போட்டுள்ளார்.. சாதாரண காய்ச்சலுக்கு வழங்கப்படும், பாரம்பரிய சிகிச்சை முறைகளை வழங்க சொல்லி உள்ளார்.. மேலும் மூலிகை டீ குடிக்கும்படி அரசே மக்களை பரிந்துரைத்து வருகிறது.

காய்ச்சல்

காய்ச்சல்

அதாவது, காய்ச்சலினால் அதிகம் பாதிக்கப்படாத நோயாளிகள் இஞ்சி அல்லது பாலுடன் கலந்த ஹனி தேநீர் மற்றும் வில்லோ-இலை குடிநீரை பருகும்படி அறிவுறுத்தி வருகிறது.. எனினும், அங்கு போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லை.. மருந்து மாத்திரைகளுக்கும் பற்றாக்குறை.. இதையெல்லாம் கேள்விப்பட்டு, வடகொரியாவுக்கு உலக நாடுகள் உதவுவதாக வலிய போய் சொன்னாலும், அதை காதிலேயே கிம் போட்டுக் கொள்ளவில்லை.. மருத்துவ உதவி வேண்டாம், பாரம்பரிய மருந்துகள் எங்களிடம் உள்ளது என்று மறுத்து வருகிறார்.

 உப்பு நீர்

உப்பு நீர்

இந்த ஹெர்பல் டீ அதாவது மூலிகை தேநீரை பருகுவதால், தொண்டை புண், இருமலுக்கு உதவுகிறதாம். அதேசமயம், இது வைரஸை கட்டுப்படுத்தாது என்று அறிந்துள்ளதால், உப்பு கலந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கிறார்களாம்.. இதன்மூலம் உடலில் நுழையும் வைரஸை செயலிழக்க செய்வதாக வடகொரிய அரசு சார்பில் சொல்கிறார்கள்.. அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரிவில்லை.. உலக நாடுகள் மொத்தமும் வடகொரியாவையே கவலையுடன் பார்த்து கொண்டிருக்கின்றன..!

English summary
How is Kim going to get rid of Corona and North Koreans drinking herbal tea ஹெர்பல் டீயை குடித்து கொரோனாவை விரட்டுகிறார்கள் வடகொரிய மக்கள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X