கிம் ஜாங் கை கடிகாரத்தை கவனிச்சீங்களா.. பரபர வட கொரியா.. உன்னிப்பாக நோட் செய்யும் உளவு அமைப்புகள்!
நியூயார்க்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், 1 மாத இடைவெளிக்கு பிறகு, இந்த வாரம் பொதுமக்கள் பார்வையில் பட்டபோது, அனைவருக்கும் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
Recommended Video
37 வயதான கிம் முன்பை விட மெல்லியதாக சோர்வாக இருப்பதை அவர்கள் கவனித்தனர்.
ஏன்.. உலக நாடுகள் அனைத்துமே அதை கவனித்தது. இதய நோய் உட்பட பல பிரச்சினைகளை கொண்ட குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர் கிம் ஜாங் உன் என்பதால், அவரது உடல்நிலையின் ஒவ்வொரு மாற்றமும் உலகத்தால் உன்னிப்பாக கவனிக்கப்படுவது வழக்கம்தான்.

கைக் கடிகாரம்
சில மாதங்கள் முன்பு வட கொரிய தொலைக்காட்சியில் கிம் ஜாங் உன் தோன்றிய காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தனர் சில சர்வதேச உளவுத்துறையினர். அவரது கைக்கடிகாரத்தின் பழுப்பு நிற பெல்ட் பகுதி அப்போதெல்லாம் கையோடு மிக இறுக்கமாக இருந்ததையும், இப்போது ரொம்ப லூசாக இருப்பதையும் கூட அவர்கள் குறிப்பெடுத்து வைத்துள்ளனர் என்கிறது, அமெரிக்க முன்னணி நாளிதழ் நியூயார்க் டைம்ஸ்.

விடை இல்லையே
கிம் உடல்நலம், வட கொரிய ஆட்சியைப் போலவே, ரகசியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தினரின் மோசமான உடல் பாதிப்பு "ஜீன்" கிம்முக்கு இப்போது உடல்நலம் பற்றி பயத்தை ஏற்படுத்தி உள்ளதா? அதனால் கிம் டயட் ஆரம்பித்துவிட்டாரா? இதுபோன்ற எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. அனைத்துமே யூகங்கள் அடிப்படையில்தான் விடையளிக்கப்படுகிறது.

கிம் உடல்நிலை பற்றி ஏன் கவலை
ஏன் கிம் உடல்நலம் குறித்து அமெரிக்கா உட்பட அத்தனை நாடுகளும் கவலைப்படுகின்றன. காரணம் இருக்கிறது. வட கொரியாவின் அணு ஆயுதக் களஞ்சியம் அவருக்கு பிறகு யாரால் கையாளப்படுமோ என்ற அச்சமும், கிம்மிற்கு திடீரென இயலாமை ஏற்பட்டால் அவரை வணங்கக் கற்றுக் கொண்ட அந்த நாட்டு மக்கள் எப்படி எதிர்வினையளிப்பார்கள் என்ற அச்சமும்தான் இதற்கு காரணம்.

எடை எவ்வளவு
2011 ஆம் ஆண்டில் தனது தந்தை கிம் ஜாங் இல் இறந்த பின்னர் வட கொரியாவை கிம் கைப்பற்றியபோது, அவர் 198 பவுண்டுகள் எடையிருந்ததாக கூறப்பட்டது. கிம், சுமார் 5 அடி 7 அங்குலம் உயரம் உள்ளவர். கடந்த ஆண்டு அவர் 308 பவுண்டு எடையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

உலக உளவு அமைப்புகள் தீவிரம்
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கிம் தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே-இன் மற்றும் அமெரிக்கா அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். அப்போது அவரது உடல்நலம் குறித்து தென் கொரிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து பல தகவல்களை திரட்டியுள்ளனர் என்கிறது நியூயார்க் டைம்ஸ்.

கிம் ஜாங் உன் மூச்சு திணறல்
2018 ஆம் ஆண்டில் பியோங்யாங்கில் மூன் ஜே-இன்னை சந்தித்த பிறகு கிம் ஒரு சிறு உயரமான பகுதிக்கு நடந்து ஏறிச் சென்றார். அப்போது, கிம் ஜாங் உன்னுக்கு கடுமையாக மூச்சு திணறியுள்ளது. அதேநேரம், தென் கொரிய அதிபர் மூன், அவர் பாட்டுக்கு இயல்பாக நடந்து சென்றார். இந்த வீடியோ அப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மது, புகைபிடித்தல்
மது, புகை என பல கெட்ட பழக்கங்கள் கிம் ஜாங் உன்னுக்கு உண்டு. தனது மாமா உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை அரசியலுக்காக தூக்கிலிட்ட கிம்மிற்கு, இந்த கெட்ட பழக்கங்களை விட்டு விடுமாறு, அவரது மனைவி ரி சோல் ஜூ, தவிர வேறு யாரும் அறிவுரைகளை வழங்கத் துணிய முடியாது என்கிறார்கள் வட கொரிய அரசியல் ஆய்வாளர்கள்.

என்ன காரணம்
கிம் ஜாங் உன் தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் இதய பாதிப்புகள் காரணமாக மரணம் அடைந்தனர். அவர்கள் குடும்ப மரபணு இதய பாதிப்புகளால் நிரம்பி உள்ளது. எனவேதான், இப்போது அவர் உடல் நலம் பெறுவதற்கு உடல்நலக்குறைவு காரணமா, அல்லது தனது குடும்ப வரலாறு பற்றிய தெளிவு காரணமாக உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு உள்ளாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும் இது அனைத்துமே இரும்புத் திரை நாடான வட கொரியாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக கிடைக்கப்பெறாத யூகங்களாக மட்டுமே இருக்கின்றன.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications