For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் "இப்படித்தான்" முடிவுக்கு வரும்?

Google Oneindia Tamil News

2 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் அமைதிப் பேச்சுவார்த்தையுடன் நிறுத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி இருக்கிறது.

நகைச்சுவை நட்சத்திரம் டூ பஞ்சாப் முதல்வர்.. ஆம் ஆத்மி பகவந்த் மான் முன் இருக்கும் 3 பெரிய சவால்கள்! நகைச்சுவை நட்சத்திரம் டூ பஞ்சாப் முதல்வர்.. ஆம் ஆத்மி பகவந்த் மான் முன் இருக்கும் 3 பெரிய சவால்கள்!

உக்ரைன் - ரஷ்யா போரின் தொடக்கம்:

உக்ரைன் - ரஷ்யா போரின் தொடக்கம்:

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 2 வாரத்துக்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, இதுவரை தான் நினைத்த எதையும் சாதிக்கவில்லை. இவ்வளவு நாட்கள் உக்கிரமான தாக்குதல்களை நடத்தி ஒரே ஒரு நகரத்தை மட்டுமே ரஷ்யாவால் கைப்பற்ற முடிந்துள்ளது.

வெற்றியடைய முடியாத விரக்தியில் ரஷ்யா:

வெற்றியடைய முடியாத விரக்தியில் ரஷ்யா:

ரஷ்யாவின் அதீத நம்பிக்கையாலும், போர் தவறுகளாலும், உக்ரைன் படைகள் மற்றும் பொதுமக்களின் தீரமிக்க எதிர்ப்பாலும் மீதம் உள்ள 19 உக்ரைன் நகரங்களை ரஷ்யாவால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால் ஆவேசத்துடன் ரஷ்யா நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களால் உக்ரைன் நகரங்கள் உருக்குலைந்து வருகின்றன.

உக்ரைனை சிதைக்கும் ரஷ்யா:

உக்ரைனை சிதைக்கும் ரஷ்யா:

பொதுமக்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் என அனைத்தின் மீதும் ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக மரியபோலில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் குழந்தைபேறு மருத்துவமனை கட்டிடம் தகர்ந்தது. அப்போது படுகாயமடைந்த கர்ப்பிணியை உக்ரைன் வீரர்கள் காயங்களுடன் மீட்டுச் செல்லும் காட்சி காண்போரை கலங்க வைத்தது.

வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு:

வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு:

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புக்கொண்டபோதிலும் அதனை தொடக்கத்தில் ரஷ்யா ஏற்க மறுத்த நிலையில், நேற்று இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டது போர் நிறுத்தத்திற்கான நல்லதொரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தை அவ்வளவு நம்பிக்கையை கொடுக்கவில்லை என உக்ரைன் தரப்பு தெரிவிக்கிறது.

அமைதிப்பேச்சுவார்த்தையா? அபாய பேச்சுவார்த்தையா?

அமைதிப்பேச்சுவார்த்தையா? அபாய பேச்சுவார்த்தையா?

இது அமைதிக்கான வழியாக பார்க்கப்பட்டாலும் மறுபக்கம் அது உக்கிரமான போருக்கு வழிவகுத்துவிடும் அபாயமாகவும் மாறும் என அஞ்சப்படுகிறது. உக்ரைனில் வொலொடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், புதின் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. நேற்றைய பேச்சுவார்த்தை என்பது அமைதிக்கான தொடக்கமா அல்லது உக்ரைன் அதிபரை சதி வலைக்குள் சிக்க வைக்கும் முயற்சியா என்ற கேள்விகளும் சேர்ந்தே எழுத்தொடங்கி இருக்கின்றன.

ரஷ்யா விதிக்கும் நிபந்தனைகள்:

ரஷ்யா விதிக்கும் நிபந்தனைகள்:

போரை ரஷ்யா நிறுத்துவதாக இருந்தால், "உக்ரைன் நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனில் இணையக்கூடாது, கிரீமியாவை ரஷ்யாவின் பிராந்தியமாக ஏற்க வேண்டும், கிழக்கு பகுதிகளை சுதந்திர பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும்" ஆகிய நிபந்தனைகளை ரஷ்யா விதிக்கும். இதில் பெரும்பாலானவற்றை உக்ரைனால் ஏற்க முடியாது. இதற்கு ஒப்புக்கொண்டால் இந்த வாரம் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன.

 உக்ரைனின் வெற்றி:

உக்ரைனின் வெற்றி:

அதே நேரம் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஹி லாவ்ரோவ் தொடர்ந்து உக்ரைன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இருதரப்புக்கும் போரை எப்படி நிறுத்துவது என்பது குறித்த போதிய தெளிவு இல்லை. ஆனால், தலைநகர் கீவை விட்டுக்கொடுக்காததும், ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தை தடுத்ததும் உக்ரைனின் வெற்றியாகவே கருதப்படுகிறது.

 முக்கிய நிபந்தனையை ஏற்ற உக்ரைன்:

முக்கிய நிபந்தனையை ஏற்ற உக்ரைன்:

இந்த போருக்கான தொடக்கப்புள்ளியாக பார்க்கப்படும் நோட்டோவில் இணையும் முடிவையே கைவிடுவதாக அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்து இருக்கிறார். அதே நேரம் ஐரோப்பிய யூனியனில் சேரக்கூடாது என்ற நிபந்தனையை ஏற்பது மிகவும் கடினமான ஒன்று. 8 ஆண்டுகளுக்கு முன் கிரிமியா போரில் ஏராளமான இழப்புகளை சந்தித்து இருக்கும் உக்ரைன் தற்போதைய தாக்குதல்களிலும் பேரிழப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

ரஷ்யா முன் இருக்கும் சவால்:

ரஷ்யா முன் இருக்கும் சவால்:

இதைவிடுத்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பல்வேறு தடைகளை தளர்த்துவதன் மூலம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் பிடி சற்று விலக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. காரணம், மேற்கு உலக நாடுகளை ரஷ்யா அதிகளவில் சார்ந்துள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பாவும் ரஷ்யாவின் எரிபொருள் உற்பத்தியை முடிவுக்கு கொண்டு வர கங்கனம் கட்டி வேலை செய்து வருகின்றனர். எனவே இந்த போரை தொடர்வதிலும், நிறுத்துவதிலும் ரஷ்யாவுக்கு லாபம், நஷ்டம் இரண்டும் உள்ளது. இதில் ஏதாவது ஒரு தரப்பின் முடிவு தவறாக அமைந்தால் கூட மிகப்பெரிய பேரழிவை இவ்வுலகம் எதிர்கொள்ளும் ஆபத்து உள்ளது.

போர் நிறுத்தை அறிவிப்பே முதல்படி:

போர் நிறுத்தை அறிவிப்பே முதல்படி:

எது எப்படி இருந்தாலும் உயிருள்ளவரை உக்ரைனை காப்போம் என அந்நாட்டு மக்கள் உறுதிபூண்டு தீரத்துடன் பேராடத் தயாராக உள்ளனர். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் உடனான போரை கைவிட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தயாராக இருந்தால், முதலில் அவர் போர் நிறுத்தத்தை அறிவித்தாக வேண்டும்.

English summary
உக்ரைன் ரஷ்யா போர், அமைதிப்பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு, போர் நிறுத்தம் வருமா? Ukraine Russia War, opportunity for peace talks, will there be a ceasefire?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X