For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1990ல் இருந்து டிவியே பார்க்காத போப் பிரான்சிஸ்: இன்டர்நெட்டையும் பயன்படுத்தியது இல்லை!

By Siva
Google Oneindia Tamil News

வாடிகன்: 1990ம் ஆண்டில் இருந்து தான் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியையும் பார்த்தது இல்லை என்றும், இன்டர்நெட்டை பயன்படுத்தியது இல்லை என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் அர்ஜென்டினாவைச் சேர்ந்த நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியின்போது அவர் கூறுகையில்,

I've not watched TV since 1990: Pope Francis

நான் 1990ம் ஆண்டில் இருந்து டிவி பார்த்தது இல்லை. 1990ம் ஆண்டு ஜுலை 15ம் தேதி இரவு இனி நான் டிவி பார்க்க மாட்டேன் என மேரி மாதாவுக்கு சத்தியம் செய்து கொடுத்தேன். எனக்கு கால்பந்தாட்ட போட்டிகள் மிகவும் பிடிக்கும். அந்த போட்டிகளை கூட நான் டிவியில் பார்ப்பது இல்லை. எனது பாதுகாவலர் தான் ஸ்கோர் பற்றி எனக்கு தெரிவிப்பார்.

நான் இன்டர்நெட்டையும் பயன்படுத்துவது இல்லை. தினமும் காலை 10 நிமிடங்கள் செய்தித்தாள் படிப்பேன், அவ்வளவு தான். வேலைப் பளு அதிகமாகியுள்ளதை உணர்கிறேன். செய்ய வேண்டிய வேலைகள் ஆயிரம் உள்ளன. போப் ஆண்டவர் ஆக வேண்டும் என ஒரு நாளும் கனவு கண்டது இல்லை.

போப் ஆன பிறகு தெருவில் நடந்து செல்வது, கடைக்கு சென்று பீட்சா சாப்பிடுவது ஆகியவை முடியவில்லை. கடையில் இருந்து வாங்கி வந்து சாப்பிடுவது அந்த அளவுக்கு நன்றாக இல்லை என்றார்.

English summary
Pope Francis told that he hasn't watched TV since 1990 and used internet. He made a promise to Virgin Mary that he won't watch TV.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X