"ரொம்ப முடியல! விடுங்க பிளீஸ்.. சூரியனை பார்த்த போதும்!" தீவிரமடையும் போர்.. கதறும் உக்ரைன் சிறுவன்
கீவ்: உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரின் பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
உக்ரைன் போர் இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தையும் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேநேரம் கடந்த சில வாரங்களுக்கு முன் துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் பல விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது.

மரியுபோல்
குறிப்பாக, உக்ரைன் தலைநகர் கீவ் சுற்றியுள்ள படைகளைக் குறைத்துக்கொள்ள ரஷ்யா சம்மதம் தெரிவித்தது. இதனால் உக்ரைன் போர் விரைவாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ரஷ்யா ராணுவத்தின் மீது உக்ரைன் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டி, ரஷ்யா மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது. இந்த முறை வடக்கு உக்ரைன் மற்றும் துறைமுக நகரமான மரியுபோல் நகரைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. குறிப்பாக மரியுபோல் நகரில் பல வாரங்களாகத் தொடர்ந்து சண்டை நடைபெறுகிறது.

வீடியோ
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான் மரியுபோல் நகரம் முழுமையாக ரஷ்யா வசம் சென்றது. அங்கு ரஷ்யா ராணுவத்தின் தாக்குதல் தொடரும் நிலையில், அங்குள்ள எஃகு ஆலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தஞ்சம் புகுந்துள்ளனர். மரியுபோலில் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி இடமாக இந்த எஃகு ஆலை உள்ளது. இதற்கிடையே அங்குப் பதுங்கி இருக்கும் குழந்தைகள் அச்சத்துடன் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

உக்ரைன் படைகள்
எஃகு ஆலையின் உள்ளே இருக்க முடியவில்லை என்று குறிப்பிடும் குழந்தைகள், வெளியே வர ஆசைப்படுவதாகவும், உணவு இல்லாமல் தவிப்பதாகவும் அதில் கலங்கிப் பேசி இருந்தனர். இந்தப் போரில் தொடக்கம் முதலே உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாகப் போரிட்டு வரும் உக்ரேனிய சார்பு அசோவ் பட்டாலியன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. தொடக்கம் முதலே மரியுபோல் நகரைக் காக்கப் போரிட்டு வரும் வீரர்களில் இந்த அசோவ் பட்டாலியன் முக்கியமானது ஆகும்.

உணவு இல்லை
இந்த வீடியோ கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த வீடியோவில் உக்ரைன் வீரர்கள் அங்குச் சிக்கியுள்ள மக்களுக்கு உணவுகளைக் கொண்டு வருவதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது. கைக்குழந்தையைக் கையில் வைத்திருக்கும் பெண் ஒருவர், தாங்கள் உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும் உண்மையிலேயே வீட்டிற்குச் செல்ல விரும்புவதாக அந்த வீடியோவில் பரிதவிப்புடன் கூறுகிறார்.

சூரியனை பார்க்கணும்
அந்த வீடியோவில் வரும் மற்றொரு சிறுவன், சுமார் இரண்டு மாதங்களாக இந்த ஆலையில் தான் இருப்பதாகவும் வெளியே வர ஆசைப்படுவதாகவும் கூறுகிறார். "எனக்கு வெளியே செல்ல வேண்டும் போல இருக்கிறது. சூரியனைப் பார்க்க விரும்புகிறேன். இங்கு வெளிச்சம் கூட ஒழுங்காக இல்லை. எத்தனை நாட்கள் இப்படி மங்கலான வெளிச்சத்தில் இருக்க முடியும். எங்கள் வீடுகள் மீண்டும் கட்டப்பட்டால் நாங்கள் நிம்மதியாக வாழலாம். உக்ரைன் எங்கள் சொந்த வீடு என்பதால் உக்ரைன் வெல்லட்டும்" அச்சிறுவன் கலங்கிச் சொல்லும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

மரியுபோல்
உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் தொடங்கிய சில நாட்களில் இருந்தே இந்த எஃகு ஆலையில் தான் தங்கியிருப்பதாக மற்றொரு பெண் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த அசோவ்ஸ்டல் வளாகத்தில் பல நூறு அப்பாவி மக்கள் தங்கி உள்ளதாகவும் இருப்பினும் ரஷ்யப் படைகள் இதை அழிக்க முயல்வதாகவும் உக்ரைன் அதிபரின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் நேற்று குற்றஞ்சாட்டினார். இருப்பினும், இத்தகவலை முற்றிலுமாக மறுத்த ரஷ்யா, ஆலையை முற்றுகையிட்டுள்ளது உண்மை தான் என்றாலும் பொதுமக்கள் இருப்பதால் தாக்கும் திட்டம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications