துண்டு சீட்டு அனுப்பிய செலன்ஸ்கி! சொல்லி வையுங்க.. அடிச்சிடுவேன்.. கோபத்தின் உச்சிக்கே போன புடின்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை அடிப்பேன் என்று ரஷ்ய அதிபர் புடின் சொன்னதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செலன்ஸ்கி அனுப்பிய ஒரு துண்டு சீட்டுதான் இந்த கோபத்திற்கு காரணமாம்.. அப்படி என்ன அதில் இருந்தது?

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து கொண்டு இருக்கிறது. இரண்டு நாட்டு படைகள் கடுமையாக மோதி வரும் நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் நடக்க உள்ளது.

உக்ரைன் இந்த பேச்சுவார்த்தையில் நடுநிலை நாடாக இருக்க சம்மதம் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த போர் தொடங்கியதில் இருந்தே இதில் ரஷ்யா நாட்டின் பணக்காரரும் செல்சியா கால்பந்து நிறுவன தலைவருமான ரோமன் அப்ரமோவிச் மத்தியசம் பேசி வருகிறார்.

உக்ரைன்

உக்ரைன்

இந்த போர் தொடங்கியதில் இருந்தே இரண்டு நாடுகளுக்கு இடையில் இவர்தான் தூதுவர் போல செயல்பட்டு மத்தியசம் பேசி வருகிறார். துருக்கி, உக்ரைன், ரஷ்யாவிற்கு அடிக்கடி மாறி மாறி சென்று பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தி வருகிறார். அதிபர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் அலிகார்க்ஸ் குழுவில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் ரஷ்யா

போர் ரஷ்யா

இந்த நிலையில்தான் சமீபத்தில் இவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இவர் கீவ் நகரத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பின் இவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த மீட்டிங்கிற்கு பின் இவருக்கு கண்கள் சிவப்பானதாகவும், தோல் உறிந்ததாகவும், மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

புடின் கோபம்

புடின் கோபம்

இவரின் உடலில் விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு நாடுகளும் விசாரணையில் குதித்து உள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இந்த நிலையில்தான் ரோமன் அப்ரமோவிச் அதிபர் புடினிடன் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கொடுத்ததாக ஒரு துண்டு சீட்டை கொடுத்து இருக்கிறார். பேச்சுவார்த்தைக்கு இடையில் அந்த துண்டு சீட்டை இவர் புடினுக்கு அளித்து இருக்கிறார்.

உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர்

இது உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கைப்பட எழுதிய லெட்டர் ஆகும். அதில் போரை நிறுத்த என்னெவெல்லாம் செய்யலாம். என்ன மாதிரியான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என்று அவர் விளக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் அந்த சீட்டை ரோமன் அப்ரமோவிச் ரஷ்ய அதிபர் புடினிடம் அளித்து இருக்கிறார். இதை பார்த்ததும் ரஷ்ய அதிபர் புடின் கடுமையாக கோபம் அடைந்துள்ளார்.

கோபம்

கோபம்

கோபத்தின் உச்சிக்கே சென்ற புடின்.. உக்ரைன் அதிபரிடம் சொல்லி வையுங்கள்.. நான் அவரை அடிப்பேன் என்று, என்று புடின் கோபமாக குறிப்பிட்டு இருக்கிறாராம். உக்ரைன் அதிபர் போரை நிறுத்த சில கண்டிஷன்களை சொன்ன நிலையில் அதை பார்த்து புடின் கோபம் அடைந்து இப்படி கூறியதாக தெரிகிறது. உக்ரைன் ரஷ்யா இடையே இன்று அமைதி பேச்சுவார்த்தை மூன்றாம் கட்டமாக துருக்கியில் நடக்கிறது. இதற்கு இடையில் இந்த பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+