For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலர் கலராக சுவரில் மாட்டலாம்.. ருவாண்டா மக்களின் மாட்டு சாண ஓவியம்.. உலக வைரல்!

ருவாண்டா நாட்டில் மாட்டு சாணம் மூலம் செய்யப்படும் கலை பொருட்கள் உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ருவாண்டா மக்களின் மாட்டு சாண ஓவியம்..வீடியோ

    கிகாளி: ருவாண்டா நாட்டில் மாட்டு சாணம் மூலம் செய்யப்படும் கலை பொருட்கள் உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.

    இமிகாங்கோ ஓவியம் என்று அழைக்கப்படும் மாட்டு சாண ஓவியத்தை வாங்க மக்கள் பெரிய அளவில் காத்து இருக்கிறார்கள். பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டு மக்களுக்கு இலவசமாக பசு மாடுகளை அளித்த பின் அந்நாட்டில் மாடு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்று விவரம் வெளியாகி வருகிறது .

    பிரதமர் மோடி ருவாண்டா நாட்டுக்கு பசு மாடுகளை பரிசளித்து இருக்கிறார். மொத்தம் 200 பசு மாடுகளை அவர் ருவாண்டா நாட்டிற்கு அளித்து இருக்கிறார். ஒரு வீட்டிற்கு ஒரு மாடு என்று 200 வீடுகளுக்கு அவர் இதை அளிக்க உள்ளார்.

    என்ன செய்கிறார்கள்

    என்ன செய்கிறார்கள்

    இந்த கலை இமிகாங்கோ ஓவியம் என்று அழைக்கப்படுகிறது. இதை மாட்டு சாணத்தை வைத்து செய்கிறார்கள். சாணத்தை தண்ணீர் ஊற்றி பதப்படுத்தி, அதில் வண்ணம் சேர்த்து, கெட்டியான பெயிண்ட் போல மாற்றுகிறார்கள். கலர் கலர் சிமெண்ட் போல இருக்கும் இதை வைத்து சுவற்றில் மாற்றும் வகையில் அழகான கலை பொருட்களை ருவாண்டா மக்கள் உருவாக்குகிறார்கள்.

    எப்படி உருவானது

    எப்படி உருவானது

    இந்த கலை இப்போது, ருவாண்டாவின் நைரகாம்பி நாட்டில் அதிக அளவில் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் ஆயிரக்கணக்கில் இதை செய்கிறார்கள். இது முதன் முதலாக 18ம் நூற்றாண்டில் உருவானது.அந்நாட்டின் அரசன் கிகாம்பியின் மகள் காகிறா இதை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அப்போதிலிருந்து மக்கள் இதை செய்து வருகிறார்கள்.

    போருக்கு பின்

    போருக்கு பின்

    1994ல் நடந்த ருவாண்டா போரில் மக்களை எல்லாவற்றையும் இழந்தார்கள். அப்போது அவர்கள் இந்த கலையையும் இழந்து இருக்கிறார்கள். ஆனால் 2000ல் இந்த கலை மீண்டும் உயிர் பெற்றது. இப்போது இது பெரிய அளவில் வியாபாரமாக மாறி மக்களுக்கு அதிக வருமானம் ஈட்டி தருகிறது.அந்த போர் சின்னங்களையும் அவர்கள் இந்த கலையில் வெளிப்படுத்துகிறார்கள்.

    அழகோ அழகு

    அழகோ அழகு

    இதை பார்க்க துளி அளவு கூட சாணம் போல இருக்காது. அப்படியே கண்ணை பறிக்கும் வகையில் கலர் கலராக இதை உருவாக்குகிறார்கள். உலகின் பெரிய 5 நட்சத்திர ஹோட்டலில் இதை வைக்க வேண்டும் என்று வாங்கி செல்கிறார்கள். இணையத்திலும் இதற்கு அதிக மதிப்பு வைத்து விற்கப்படுகிறது.

    English summary
    Imigongo Paintings: How Rwanda Cow Dung Art becomes the world famous.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X