ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம் !! 20 போலீஸ் அதிகாரிகள் பலி !!!
கந்தகார் : தெற்கு ஹெல்மன்ட் மாகாணத்தில் முசா குயாலா மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளில் தீவிரவாதிகள் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 20 காவல் துறை அதிகாரிகள் பலியாகினர்.
அதை தொடர்ந்து, போலீசாரும், ராணுவமும் இணைந்து தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு தீவிரவாதிகளும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.

இந்த சண்டையில் 10 காவல் துறை அதிகாரிகள் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் தரப்பிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை தெற்கு ஹெல்மன்ட் மாகாண காவல் துறை தலைமை அதிகாரி முகமது இஸ்மாயில் ஹோடக் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இத்தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த மாதம் ஹெல்மன்ட் மாகாணத்தில் நியூ ஷாத் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் தாக்கியதில் 19 போலீஸ் அதிகாரிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
