மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்.. நார்வேதான் நம்பர் 1.. நம்ம நாடு எங்க இருக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகளவில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான், நேபாள் ஆகிய நாடுகளுக்குப் பின்னால் இந்தியா 122வது இடத்தை பிடித்துள்ளது.

உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டின் தனி நபர் வருமானம், ஆரோக்கியம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம், மக்களின் மனநிலை ஆகியவை மகிழ்ச்சி்க்கான அளவு கோலாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையி்ல் 155 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நார்வே நாட்டுக்கு முதலிடம்

நார்வே நாட்டுக்கு முதலிடம்

இந்த ஆய்வின் முடிவில் 2017-ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் நார்வே முதலிடத்தை பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தில் டென்மார்க்கும், 3, 4, மற்றும் 5-வது இடங்களில் ஃபின்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்வீடன் நாடுகளும் உள்ளன.

பங்காளி பாகிஸ்தானுக்கு 80

பங்காளி பாகிஸ்தானுக்கு 80

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவை விட 42 இடங்கள் முன்னிலை பெற்று பாகிஸ்தான 80-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளத்துக்கு 99வது இடமும் பூட்டானுக்கு 97வது இடமும் பங்களாதேஷ்க்கு 110வது இடமும் கிடைத்துள்ளது.

அமெரிக்காவுக்கு 14வது இடம்

அமெரிக்காவுக்கு 14வது இடம்

இலங்கை 120 வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் அமெரிக்காவின் பெயர் இல்லை. மாறாக 14வது இடத்தில் அமெரிக்கா இடம் பெற்றுள்ளது.

உள்ளதும் போச்சு

உள்ளதும் போச்சு

இந்தியாவுக்கு 122-வது இடமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இருந்த 118-வது இடத்திலிருந்து 4 இடங்கள் பின்தங்கி உள்ளதையும் பறிகொடுத்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகள் கடைசி

ஆப்பிரிக்க நாடுகள் கடைசி

தெற்கு சூடான், லைபீரியா, ருவான்டா, தான்சானியா, ஃப்ரூன்டி மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகள் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளவையாகும்.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நாடுகள்..

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நாடுகள்..

1. நார்வே
2. டென்மார்க்
3. ஐஸ்லாந்த்
4. சுவீட்சர்லாந்த்
5. பின்லாந்த்
6. நெதர்லாந்த்
7. கனடா
8. நியூசிலாந்த்
9. ஆஸ்திரேலியா
10. சுவீடன்

துக்கமான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நாடுகள்..

துக்கமான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நாடுகள்..

1. ஏமன்
2. தெற்கு சூடான்
3. லைப்ரீயா
4. கினியா
5. டோகோ
6. ருவாண்டா
7. சிரியா
8. டான்சானியா
9. புரூண்டி
10. மத்திய ஆப்பிரிக்க நாடுகள்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In the World Happiness Report 2017, Norway stood at the top slot, followed by Denmark and Iceland. India ranks at 122 in the list of happiest countries.
Please Wait while comments are loading...