For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு ஆயுதங்கள்... அமெரிக்காவும், ரஷ்யாவும் குறைக்கின்றன.. இந்தியாவும், பாக்.கும் குவிக்கின்றன

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: உலக வல்லரசுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களைக் குறைத்து வரும் நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்டு அதைக் குவித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

தொடர்ந்து இரு நாடுகளும் அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது. இரு நாடுகளும் வல்லரசாக தங்களை நிரூபிக்க இந்த ஆணு ஆயுதக் குவிப்பில் இறங்கியுள்ளனவாம்.

இதுகுறித்து ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வுக் கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உலக அளவில் குறையும் ஆயுதங்கள்

உலக அளவில் குறையும் ஆயுதங்கள்

உலக அளவில் அணு ஆயுதங்கள் குறைந்து வருகின்றன. அதேசமயம், இந்தியாவும், அமெரிக்காவும் அணு ஆயுதங்களைக் குவித்து வருகின்றன.

குறைக்கும் அமெரிக்கா, ரஷ்யா

குறைக்கும் அமெரிக்கா, ரஷ்யா

அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களைக் குறைத்து வருகின்றன. இதனால்தான் உலக அளவில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறைய முக்கியக் காரணம்.

இந்தியா, பாகிஸ்தான் போட்டி

இந்தியா, பாகிஸ்தான் போட்டி

மறுபக்கம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. தெற்காசியாவில் யார் வல்லரசு என்பதை நிரூபிக்க இவ்வாறு போட்டி நடக்கிறது.

இந்தியாவை விட அதிகம்

இந்தியாவை விட அதிகம்

இந்தியாவிடம் 90 முதல் 110 அணு ஆயுதங்கள் இருக்கலாம். அதேசமயம், பாகிஸ்தானிடம் 100 முதல் 120 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 4300

உலகம் முழுவதும் 4300

உலகம் முழுவதும் தற்போது செயல்பாட்டு நிலையில் 4300 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில் 1800 அணு ஆயுதங்கள் அதி அபாயகரமானவை, உடனடியாக செலுத்தக் கூடிய ஆயத்த நிலையில் இருப்பவை.

9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள்

9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள்

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. இவர்களிடம் மொத்தமாக 15,950 அணு ஆயுதங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை உடனடி செயல்பாட்டுக்கு ஆயத்தமாக இல்லாதவையாகும்.

500 அணு ஆயுதங்களைக் குறைத்த ரஷ்யா

500 அணு ஆயுதங்களைக் குறைத்த ரஷ்யா

ரஷ்யா 2014-15ம் ஆண்டில் தன்னிடம் இருந்த 8000 அணு ஆயுதங்களை 7500 ஆக குறைத்தது. அதேசமயம், அமெரிக்கா 7300 அணு ஆயுதங்களிலிருந்து 7260 ஆக குறைத்தது.

சீனாவிடம் 260

சீனாவிடம் 260

பிரான்சிடம் 300, சீனாவிடம் 260 அணு ஆயுதங்கள் உள்ளன. இங்கிலாந்திடம் 215, பாகிஸ்தானிடம் அதிகபட்சம் 120, இந்தியாவிடம் அதிகபட்சம் 100, இஸ்ரேலிடம் 80, வட கொரியாவிடம் 6 முதல் 8 அணு ஆயுதங்கள் வரை உள்ளதாக கருதப்படுகிறது.

English summary
India and Pakistan continue to expand their nuclear weapon production capabilities and new missile delivery systems, despite a decline in nuclear stockpile of the global powers. "India and Pakistan are expanding their nuclear weapon production capabilities and developing new missile delivery systems," according to annual report brought out by Stockholm International Peace Research Institute(SIPRI).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X