For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லாம் பொய்.. "நேரம்" பார்த்து தூதர்களை வெளியேற்றுகிறது இந்தியா.. பாகிஸ்தான் பரபரப்பு குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: உளவு பார்த்ததற்காக புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் பாதி ஊழியர்களை இந்தியா வெளியேற்றுவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Recommended Video

    India எங்களை தாக்க திட்டம் போடுது... Pakistan பகீர் குற்றச்சாட்டு

    இமயமலையில் இந்தியா பாகிஸ்தான், நேபாளம்,சீனா உள்ளிட்ட நாடுகள் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் பாகிஸ்தான் 1948களில் இந்தியாவின் காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரிமித்து ஆஸாத் காஷ்மீர் என்ற பெயரில் நிர்வகித்து வருகிறது.

    இதில் ஒரு பகுதியை சீனாவிற்கு பாகிஸ்தான் தானமாக வழங்கிவிட்டது. இன்னொரு பக்கம் அக்சயசீன் பகுதியை 1962களில் ஆக்கிரமித்த சீனா, அதன்பிறகு தற்போது கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தனக்கு சொந்தம் என உரிமை கொண்டாடி போர்க்கொடி உயர்த்தி வருகிறது. மூன்று அணு ஆயுத அண்டை நாடுகளான இந்தியா, சீனா, மற்றும் பாகிஸ்தான் இடையே இமயமலையில் அதிக எல்லை நிர்ணயம் தொடர்பாக வரலாற்று மோதல்கள் காணப்படுகிறது.

    பின்லேடன் ஒரு தியாகி.. அமெரிக்காதான் அத்துமீறியது.. பாக். பிரதமர் இம்ரான் பரபர கருத்து.. திருப்பம்! பின்லேடன் ஒரு தியாகி.. அமெரிக்காதான் அத்துமீறியது.. பாக். பிரதமர் இம்ரான் பரபர கருத்து.. திருப்பம்!

    பல வருடத்திற்கு பின்

    பல வருடத்திற்கு பின்

    இதில் பல ஆண்டுகளாக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் நடந்து வருகின்றன. பாகிஸ்தான் இந்திய எல்லையில் தீவிரவாதிகளை அனுப்பி தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரில் தொடர்ந்து வன்முறைகளை மறைமுகமாக பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் தான் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையில் 1975க்கு பிறகு முதல் முறையாக மிகப்பெரிய மோதல் அரங்கேறி உள்ளது.

    கிழக்கு லடாக்

    கிழக்கு லடாக்

    இந்நிலையில் கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜனவரி 15ம் தேதி இந்தியாவிடம் சீன அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். சீனா தரப்பிலும் சுமார் 40 பேர் வரை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி தகவல்களை சீனா வெளியிட மறுத்துவிட்டது.

    பொய்யான குற்றச்சாட்டு

    பொய்யான குற்றச்சாட்டு

    இந்நிலையில் இமயமலையில் சீனப் படையினர், இந்திய படையினர் மீது தாக்குதல் நடத்திய பின்னர், மக்களிடம் கவனத்தை திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் தூதர்களை உளவு பார்த்ததாக கூறி இந்தியா வெளியேற்ற முயற்சிப்பதாக பாகிஸ்தான் பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

    எங்களையும் இழுக்கிறார்கள்

    எங்களையும் இழுக்கிறார்கள்

    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறுகையில். லடாக் பிராந்தியத்தில் ஜூன் 15 மோதலுக்குப் பின்னர் பதட்டம் குறித்து பாகிஸ்தான் கவலை கொண்டுள்ளது, இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் இந்தியா தங்களை மோதலுக்கு இழுக்க சாத்திய கூறுகள் இருப்பதாக அபாண்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

    வெளியேற்றிய இந்தியா

    வெளியேற்றிய இந்தியா

    உளவு பார்த்ததற்காக புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாதி ஊழியர்களை வெளியேற்றுவதாக செவ்வாயன்று இந்தியா அறிவித்தது. இதை கண்டித்துள்ள குரேஷி இந்தியா உள்நாட்டில் கவனத்தை திசை திருப்ப தங்களை பயன்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

    English summary
    Pakistan has accused old rival India of trying to distract the attention of its people by expelling Pakistani diplomats after Indian forces got a "battering" at the hands of Chinese troops in a clash on their disputed Himalayan border.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X