காபூலில் தவிக்கும் இந்தியர்களின் தற்போதைய நிலை என்ன? இந்திய அரசுக்கு அங்கு என்ன சவால்?
காபூல் : காபூல் விமான நிலைய வாயிலுக்கு வெளியே இந்தியர்கள் பலர் காத்துக்கிடக்கிறார்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது ஆப்கானிஸ்தானில் 1000 இந்தியர்கள் சிக்கியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் இருப்பிடம் தெரியாததால், மீட்பதில் அரசுக்கு சவாலாக உள்ளது.
இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி (ஞாயிறு) உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவம் நடந்தது. ஆம்.. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை ரத்தமின்றி,யுத்தமின்றி, முற்றுகையிட்டு கைப்பற்றினார்கள்.
யுத்தத்தை தவிர்க்க பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து அதிபர் அஷ்ரப் கனி தப்பியோடினார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தஞ்சம் புகுந்துள்ளார்.
தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது உறுதி- அமைச்சர் அன்பில் மகேஷ்.

காபூல் விமான நிலையம்
அதிபரே தாலிபன்களுக்கு பயந்து தப்பியோடிவிட்டதால், அந்நாட்டு மக்கள் பலர் தப்பியோடினார்கள். மேலும் பலர் எப்படியாவது நாட்டைவிட்டு தப்பிக்க வேண்டும் என்று காபூல் விமான நிலையத்தில் காத்துக்கிடக்கிறார்கள். 150 பேர் பயணிக்க வேண்டிய அமெரிக்க விமானத்தில் 600க்கும் மேற்பட்டவர்கள் பயணித்த அபாயகரமான காட்சிகளை அண்மையில் உலகம் கண்டது.

மத்திய அரசு
வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகள் பலரும் காபூலை விட்டு வெளியேறிவிட்டனர். இந்தியாவும் தனது தூதர்களை திரும்ப அழைத்துக்கொண்டது. தற்போது காபூலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. தூதரகத்தின் இணையதள முகவரியில், பதிவு செய்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வருகிறது.

தஜிகிஸ்தான்
ஆகஸ்ட் 15ம் தேதி 129 பேரை இந்தியாவின் ஏர் இந்தியா விமானம் மீட்டது. அதன்பிறகு பகுதி பகுதியாக இந்தியர்களை விமானங்கள் அனுப்பி மீட்டு வருகிறது. இந்திய விமானப்படையின் சி -130 ஜே போக்குவரத்து விமானம் காபூலில் இருந்து சுமார் 85 இந்தியர்களை தற்போது மீட்டது. இந்திய விமானம் தஜிகிஸ்தானின் துஷான்பேவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. மேலும் சிலரை வெளியேற்றுவதற்காக இரண்டாவது (பெரிய சி -17) விமானம் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூல் விமான நிலையம்
காபூலில் உள்ள விமான நிலையத்திற்கு முடிந்தவரை பல இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு முயற்சிக்கிறது . அவர்களை எப்படியாவது காபூல் விமான நிலையத்திற்கு கொண்டுவரும் பணிகளை வெளியறவுத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

அரசுக்கு சவால்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டின் பல நகரங்களில் 1,000 இந்தியர்கள் தங்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் இருப்பிடம் மற்றும் நிலையை உறுதிப்படுத்துவது ஒரு சவாலாக உள்ளது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார், ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களை தூதரகத்தில் பதிவு செய்யவில்லை . அவர்களில் சுமார் 200 சீக்கியர்களும் இந்துக்களும் காபூலில் உள்ள குருத்வாராவில் தஞ்சமடைந்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications