For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாதான் சீன எல்லைப் பகுதியை ஆக்கிரமித்ததாம்.. சீனா சொல்லும் புது காரணத்தையும் பாருங்க!

அமெரிக்காவை சந்தோஷப்படுத்தவே இந்தியா சீனப் பகுதியை ஆக்கிரமித்ததாக அந்நாட்டு அரசு மீடியா தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: டொனால்டு டிரம்பை கவரவே இந்தியா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது என சீன அரசு மீடியா தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி - டொனால்டு டிரம்ப் இடையிலான சந்திப்பின் போது அமெரிக்காவை கவரவே இந்தியா எல்லையில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது என்றும் அந்நாட்டு அரசு மீடியா தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலத்தில் இந்தியா-பூடான்-சீனா எல்லை அருகே டோகா லா பகுதியில் உள்ள லால்டன் என்ற இடத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு இந்திய ராணுவம் இரண்டு பதுங்கு குழிகளை அமைத்து இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் புல்டோசர்கள் உதவியுடன் 2 பதுங்கு குழிகளையும் சீன ராணுவத்தினர் அழித்தனர்.

இதைத்தெடர்ந்து இரு நாட்டு எல்லையிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனால் எல்லைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிக்க தொடங்கிய சீனா

ஆக்கிரமிக்க தொடங்கிய சீனா

இந்த பகுதியின் பெரும் பாலான இடங்கள் இந்தியா வசம் உள்ளது. சிறிய பகுதி சீன கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதியில் இந்தியாவின் இடத்தை சீனா ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது.

பூடானும் எதிர்ப்பு

பூடானும் எதிர்ப்பு

சீன ராணுவம் சாலை கட்டுமான பணிகளை முன்னெடுத்ததை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இந்தியாவும், பூடானும் சீனாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து சீண்டும் சீனா

தொடர்ந்து சீண்டும் சீனா

எல்லைப் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற முடியாது என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆனால் சீன அரசு தேவையில்லாத கருத்துக்களை தேவையில்லாத பிரச்சனையை எழுப்பி விடுகிறது.

அடங்க மறுக்கும் சீன ஊடகங்கள்

அடங்க மறுக்கும் சீன ஊடகங்கள்

சீன மீடியாக்களும் தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகின்றன. இந்நிலையில் சீன அரசு மீடியா இந்தியாதான் சீனப்பகுதியை ஆக்கிரமித்து வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

ட்ரம்பை கவரவே..

ட்ரம்பை கவரவே..

மேலும் அதற்கான காரணம் ஒன்றையும் சீன அரசு மீடியா தெரிவித்துள்ளது. அதாவது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை கவரவே இந்தியா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது என சீன அரசு மீடியா புதிய தகவலை வெளியிட்டு உள்ளது.

சீனாவுக்கு செக் வைக்க..

சீனாவுக்கு செக் வைக்க..

பிரதமர் மோடி - டொனால்டு டிரம்ப் இடையிலான சந்திப்பின் போது அமெரிக்காவை கவரவே, இந்தியா எல்லையில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது என சீனவின் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய - பசிபிக் பகுதியில் சீனாவிற்கு செக் வைக்கவே அமெரிக்கா இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்துகிறது என்றும் பொருளாதாரத்தில் சீனாவின் வளர்ச்சிக்கும் செக் வைக்கும் நோக்குடனே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

English summary
The Chinese state media reported that India was involved in the invasion to attract Donald Trump. During the meeting between Donald Trump and Prime Minister Modi The India was invading in China border they said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X