For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"சிங் இஸ் கிங்" அன்று பாகிஸ்தான், இன்று தெ.ஆ.. முதல் பந்திலேயே விக்கெட்டுகளை அள்ளும் அர்ஷ்தீப்!

Google Oneindia Tamil News

பெர்த்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீ சிங் எப்படி முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினாரோ, அதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 9 விக்கெட்டுகளுக்கு 133 ரன்கள் எடுத்தது. தொடக்கம் முதல் கடைசி வரை போராடிய சூர்யகுமார், தனியாளாக 40 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார்.

சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி சவால் அளிக்கும் வகையிலான ஸ்கோரை பதிவு செய்தது. இருந்தும் இந்திய அணி சவால் அளிக்க தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் வீழ்த்த வேண்டிய தேவை இருந்தது.

கடைசி பாலை விடுங்க.. அதுக்கு முன்பே உறுதியான பாகிஸ்தான் தோல்வி! பங்காளிகள் வீழ்ந்தது எங்கு தெரியுமா? கடைசி பாலை விடுங்க.. அதுக்கு முன்பே உறுதியான பாகிஸ்தான் தோல்வி! பங்காளிகள் வீழ்ந்தது எங்கு தெரியுமா?

 கவனமாக ஆடிய டி காக்

கவனமாக ஆடிய டி காக்

இதனால் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் டி காக் அல்லது பவுமா விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனென்றால் பெர்த் விக்கெட்டில் நல்ல ஸ்விங்கும், வேகமும் இருப்பதால் புவனேஷ்வர் குமார் நன்றாக வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி கவனமாக ஆடியது.

 அர்ஷ்தீப் சிங்

அர்ஷ்தீப் சிங்

இதன்பின்னர் இரண்டாவது ஓவரை வீசி அட்டாக் செய்ய ஷமி அழைக்கப்படுவார் என்ற எதிர்பார்த்த நிலையில், திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அர்ஷ்தீப் சிங் கைகளிலேயே ரோஹித் ஷர்மா பந்தை கொடுத்தார். ரோஹித் ஷர்மாவின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடியான பேட்ஸ்மேனான டி காக்கை 1 ரன்களுக்கு வீழ்த்தி அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தார்.

 ரூஸ்ஸோவை வீழ்த்திய அர்ஷ்தீப்

ரூஸ்ஸோவை வீழ்த்திய அர்ஷ்தீப்

இதனால் இந்திய அணி சவால் அளிக்கும் என்று எதிர்பார்த்தாலும், ரூஸ்ஸோ களத்திற்கும் புகுந்தார். ஏற்கனவே சதம் விளாசி உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் ரூஸ்ஸோவை வீழ்த்தினால் சரியாக இருக்கும் என்ற பார்க்கப்பட்ட நிலையில், அதே ஓவரின் 3வது பந்திலேயே வீழ்த்தி அர்ஷ்தீப் சிங் அசத்தினார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 3 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

 முதல் பந்தில் அசத்தும் அர்ஷ்தீப்

முதல் பந்தில் அசத்தும் அர்ஷ்தீப்

இதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே பாபர் அசாமை வீழ்த்தி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார். இதேபோல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வரும் போட்டியிலும் அர்ஷ்தீப் சிங் இந்திய அணி பதிலடி கொடுக்க காரணமாக அமைந்துள்ளார்.

 விமர்சனங்களுக்கு பதிலடி

விமர்சனங்களுக்கு பதிலடி

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான இவரை, சில நாட்களுக்கு முன் ரசிகர்கள் சிலர் காலிஸ்தான் என்று கடுமையாக விமர்சித்தன. ஆனால் அர்ஷ்தீப் சிங் ஒவ்வொரு போட்டியிலும் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Indian player Arshdeep Singh took a wicket in the first ball in the match against Pakistan. Also now he took a wicket in the first ball of the match against South Africa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X