குவைத், பஹ்ரைன் மீது சரமாரி தாக்குதள்.. ஈரானின் வெறியாட்டம்.. CENTCOM கொடுத்த பகீர் அறிக்கை!

Subscribe to Oneindia Tamil

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் தற்போது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அச்சுறுத்தும் வகையில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. சர்வதேசப் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு இடையே, ஈரான் தனது அண்டை நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனில் இருக்கும் அமெரிக்க தளத்தை குறிவைத்து அதிரடியாக 7 அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் திடீர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகக் குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய இரு நாடுகளிலும் போர் அபாய எச்சரிக்கை சைரன்கள் (Alarm Sirens) தொடர்ந்து ஒலித்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Iran Kuwait USA Bahrain War Iran missile attack Kuwait Bahrain US CENTCOM official statement Iran US 5th Fleet headquarters Bahrain attack ballistic missiles intercepted Kuwait air defence Middle East war escalation drone strike air alarm sirens Kuwait City Iran Revolutionary Guard attack US bases Kuwait international airport drone strike casualty Strait of Hormuz US military response Gulf countries security emergency alerts 2026

நள்ளிரவில் அலறிய சைரன்கள்

அல் ஜசீரா வெளியிட்ட தகவல் படி ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து குவைத் நாட்டில் ஐந்து முறை போர் அபாய சைரன் ஒலிகள் கேட்டுள்ளன. அதேநேரம், குவைத் நாட்டின் வான் பாதுகாப்புப் படை (Kuwaiti Air Defence) ஈரானிய ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வானிலேயே சுட்டு வீழ்த்திய அதிர்வு சத்தங்களும் நகர் முழுவதும் கேட்டுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, குவைத் ராணுவம் உடனடியாகப் பொதுமக்களுக்கு அவசரப் பாதுகாப்பு அறிவுரையை வெளியிட்டு, பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவசரகால அறிவிப்பை விடுத்துள்ளது. தற்போது தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பஹ்ரைன் அதிரடி எச்சரிக்கை

குவைத்தைப் போலவே பஹ்ரைனிலும் சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் அவசரநிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில், "நாட்டின் அனைத்து மக்களும் உடனடியாக தங்களுக்கு அருகில் உள்ள பாதுகாப்பான தங்குமிடங்களுக்குச் (Shelters) செல்லுமாறும்" அவசரமாகக் கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவுக்கு முதல் அடி?

ஈரான் குவைத் மற்றும் பஹ்ரைன் மீது தாக்குதல் நடத்த முக்கியமான காரணம் உள்ளது. பஹ்ரைனில் அமெரிக்காவின் மிக முக்கியப் பாதுகாப்புப் படையான 5-வது கடற்படைத் தலைமையகம் (US 5th Fleet Headquarters) உள்ளது. இரவு நடத்திய தாக்குதலில் ஈரானின் ஏவுகணைகள் US 5th Fleet Headquarters-ஐ வெற்றிகரமாகத் தாக்கி அழித்துவிட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.

ஈரான் கூறுவது பொய்

ஈரான் US 5th Fleet Headquarters-ஐ தாக்கியுள்ளதாக கூறுவது பொய் என அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகமான சென்ட்காம் (CENTCOM) தற்போது ஒரு அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக வந்த ஈரானின் 4 ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதோடு, ஈரானின் கடலோர ரேடார் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பழிவாங்கவே ஈரான் குவைத் மற்றும் பஹ்ரைன் மீது 7 ஏவுகணைகளை ஏவியுள்ளது என்று சென்ட்காம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தங்களின் ஆரம்பக்கட்ட ஆய்வுகளின்படி, ஈரான் ஏவிய 7 ஏவுகணைகளில் 6 ஏவுகணைகளை அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் வான் பாதுகாப்புப் படைகள் நடுவானிலேயே துல்லியமாக எதிர்தாக்குதல் நடத்தி அழித்துவிட்டன என்றும், 7-வது ஏவுகணை இலக்கை அடையாமல் வழியிலேயே விழுந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படை வீரர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அமெரிக்காவின் 5-வது கடற்படையைத் தாக்கி அழித்துவிட்டதாக ஈரான் கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் சென்ட்காம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

குவைத் விமான நிலையத்தில் நடந்த பலி

இதற்கு முன்பு கடந்த ஜூன் 3 ஆம் தேதி, ஈரானின் தற்கொலை படை ட்ரோன் ஒன்று குவைத் சர்வதேச விமான நிலையத்தின் (Kuwait International Airport) டி1 பயணிகள் முனையத்தை அதிரடியாகத் தாக்கியதில் அங்கிருந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாகப் பலியானார் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தத் கொடூரத் தாக்குதலுக்கு ஈரானே முழுப் பொறுப்பு என்று குவைத் குற்றம் சாட்டியிருந்த நிலையில், ஈரான் அதனை மறுத்திருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+