திணறும் அமெரிக்கா - இஸ்ரேல்.. ஈரான் உச்ச தலைவர் கமேனியை காக்கும்.கருப்பு படை.. களமிறங்கிய NOPO
டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை கொல்ல இஸ்ரேல், அமெரிக்கா திட்டமிட்டுள்ளன. ஆனால் மொஜ்தபா கமேனி எங்கிருக்கிறார்? என்பது பற்றிய விஷயம் தெரியவில்லை. இதனால் தான் மொஜ்தபா கமேனி பற்றி தகவல் கொடுப்போருக்கு 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு இந்நிலையில் தான் மொஜ்தபா கமேனி NOPO எனும் படையின் கண்காணிப்பில் உள்ளதோடு, இதுதான் அமெரிக்காவுக்கு அந்த NOPO படையின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. முதல் நாளிலேயே ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து இடைக்கால அரசு அமைந்தது. இந்த இடைக்கால அரசின் நிர்வாகிகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கொன்றது.

இதையடுத்து ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் ஆவார். மொஜ்தபா கமனேியின் தேர்வை இஸ்ரேல், அமெரிக்கா விரும்பவில்லை. இதனால் அவரையும் கொல்வோம் என்ற இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவும் அவரை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளது.
கோமாவில் மொஜ்தபா கமேனி?
மொஜ்தபா கமேனி உச்சபட்ச தலைவராக தேர்வான பிறகு இன்று வரை பொதுவெளியில் தோன்றவில்லை. இதனால் மர்மம் நீடிக்கிறது. நேற்று முன்தினம் மொஜ்தபா கமேனி அறிக்கை தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அது நடக்கவில்லை. மாறாக மொஜ்தபா கமேனியின் அறிக்கையை செய்தி வாசிப்பாளர் வாசித்தார். அதில் ஈரான் சரணடையாது. தங்களை தாக்கும் நாடுகளுக்கு உரிய பதிலடி கொடுக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே தான் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் மொஜ்தபா கமேனி படுகாயமடைந்து கோமா நிலையில் உள்ளதாக பிரிட்டன் ஊடகம் 'தி சன்' செய்தி வெளியிட்டுள்ளது. இதனை ஈரான் இன்னும் உறுதி செய்யவில்லை. இதுபற்றி அமெரிக்கா தரப்பில், ''மொஜ்தபா கமேனி படுகாயத்துடன் உயிருடன் இருக்கலாம்'' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு
இருப்பினும் மொஜ்தபா கமேனி எங்கிருக்கிறார்? எப்படி இருக்கிறார்? உயிருடன் இருக்கிறாரா? படுகாயமடைந்துள்ளாரா? கோமா நிலையில் உள்ளாரா? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. அவர் இருக்கும் இடம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் மொஜ்தபா கமேனி பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வெகுமதி அளிக்கப்படும். இது நீதிக்கான வெகுமதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
அதில் மொஜ்தபா கமேனி மட்டுமின்றி ஈரான் புலனாய்வு அமைச்சர் எஸ்மாயில் காதிப், துணைத் தலைமைத் தளபதி அலி அஸ்கர் ஹெஜாசி, மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம் சஃபாவி, உள்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் எஸ்கந்தர் மோமெனி மற்றும் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி உள்ளிட்டோரின் பெயர்களை அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது. இவர்களை பற்றி தகவல் வழங்கினால் 10 லட்சம் டாலர் வரை கிடைக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
NOPO பாதுகாப்பில் மொஜ்தபா கமேனி
இந்நிலையில் தான் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி 'நோபோ' (NOPO) பாதுகாப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த 'நோபா' என்பது என்ன? அதில் இருக்கும் படை வீரர்கள் யார்? எப்படி செயல்படுவார்கள்? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது இதுபற்றி அறிய வேண்டும் என்றால் முதலில் நாம் ஈரான் பாதுகாப்பு படைகளின் செயல்பாடு பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.
ஈரானின் ஆர்டெஷ் - ஐஆர்ஜிசி பிரிவு
அதாவது ஈரானின் பாதுகாப்பு படை பிரிவில் "ஆர்டெஷ்" எனப்படும் வழக்கமான ராணுவ பிரிவு உள்ளது. இது தரைப்படை, விமானப்படை, கடற்படைஉள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இது ஈரானின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்படும். வேறு பணிகளை செய்யாது.
அதன்பிறகு 1979ல் ஈரானில் மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு ஐஆர்ஜிசி எனும் ஈரான் புரட்சிகர காவல் படை உருவாக்கப்பட்டது. இந்த ஐஆர்ஜிசி படையில் 1.2 லட்சம் வீரர்கள் வரை உள்ளனர். இவர்கள் உச்சப்பட்ச தலைவரின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள். இவர்களுக்கும் 'ஆர்டெஷ்' கீழ் வரும் முப்படைகளுக்கும் சம்பந்தம் கிடையாது. ஈரானை எடுத்து கொண்டால் 'ஆர்டெஷ்' படையை விட ஐஆர்ஜிசி வீரர்கள் தான் திறமை வாய்ந்தவர்கள்.
இவர்களுக்கு என்று தனியே விமானப்படை, கடற்படை உள்ளது. இவர்கள் உள்நாட்டு பாதுகாப்பு மட்டுமின்றி ஈராக், லெபனான், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளிலும் தங்களின் ஆதரவு கிளர்ச்சி படைகளுக்கு பக்கப்பலமாக களமிறங்கி சண்டை செய்பவர்கள். இவர்கள் நேரடியாக உச்ச தலைவரால் கட்டுப்படுத்தப்படுவார்கள்.
'நோபோ' படையினர் பின்னணி
இதுதவிர ஈரானில் இருக்கும் இன்னொரு படை தான் NOPO. இது ஐஆர்ஜிசி-யை விட ஆபத்தானவர்கள். சிறந்த போர் பயிற்சி, அவசர காலத்தில் மின்னல் வேகத்தில் எஸ்கேப்பாவது உள்ளிட்டவற்றில் கைதேர்ந்தவர்கள். NOPO என்பது பார்சி மொழியில் உள்ள Norouyeh Vijeh Pasdaran Vlayat என்பதன் சுருக்கமாகும். இதன் பொருள் 'ஆட்சியை பாதுகாக்கும் சிறப்பு படை' என்பதாகும்.
இந்த படைப்பிரிவு கடந்த 1991ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஈரானின் முதல் உச்ச தலைவர் அயதுல்லா ரூஹெல்லா கோமெய்னியின் ஆட்சியின்போது இது உருவாக்கப்பட்டது. ்வரை பாதுகாத்து வந்த 28வது ரோஹல்லா பிரிவிலிருந்து இது பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
இந்த 'நோபோ' படை பிரிவினரின் முக்கிய பணி என்பது உச்ச தலைவரை பாதுகாப்பது தான். எந்த காரணம் கொண்டும் எதிரிகளை உச்ச தலைவரை நெருங்காமல் பாதுகாப்பதில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் தான் ஆபத்து காலத்தில் அயதுல்லா அலி கமேனியை பலமுறை பாதுகாத்து வந்தனர்.
அமெரிக்கா தடை விதித்த படை
இவர்கள் ஐஆர்ஜிசி மற்றும் ஈரானின் ராணுவத்தில் இருந்து தனித்து செயல்படுவார்கள். ரகசியமாகவும இயங்குவார்கள். இதில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை ஐஆர்ஜிசி அளவுக்கு அதிகம் கிடையாது. உச்ச தலைவரை காப்பாற்ற நான்கு படைகளும், மஷத் மற்றும் இஸ்ஃபஹான் (அணுசக்தி தளங்கள்) பாதுகாப்பில் 2 படைகளும் மட்டுமே உள்ளனர். கருப்பு சீருடையில் வலம் வரும் உள்நாட்டில் அரசுக்கு எதிரான கலவரங்களை கட்டுப்படுத்தும் பணியையும் மேற்கொள்வார்கள்.
ஈரானில் பெரிய பிரச்சனையாக மாறிய 1999 மாணவர் போராட்டங்கள் முதல் 2022ம் ஆண்டில் 22 வயது மஹ்சா அமினியின் 'லாக்அப் டெத்' வன்முறையில் பற்றி எரிந்த ஈரானில் அமைதியை கொண்டு வந்தததில் இந்த 'நோபோ' படையினர் முக்கியமானவர்கள். இந்த 'நோபோ' படைய மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டிலேயே மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக கூறி அமெரிக்க தடை செய்துள்ளது. இருப்பினும் ஈரானை எடுத்து கொண்டால் இந்த 'நோபோ' படையினர் தான் உச்ச தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது மெஜ்தபா கமேனி இந்த 'நோபோ' படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
முடங்கும் அமேசான் சேவைகள்? ஈரான் சரமாரி ‘அட்டாக்’.. பற்றி எரியும் பஹ்ரைனால் டிரம்புக்கு பிரஷர் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்!












Click it and Unblock the Notifications