For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஃபேஸ்புக், டுவிட்டர், சமூக வலைத்தளங்களுக்கு ஈராக் தடை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பாக்தாத்: ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளை தடுக்கும் வகையில், ஈராக்கில் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் கடுமையான சண்டை நடைபெறும் நிலையில், ஈரான் நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஈராக்கில் ஆளும் ஷியா பிரிவு அரசுக்கு எதிராக, சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இருதரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெறும் நிலையில், தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை தடுக்கும் வகையில், அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூ டியூப் இணையதளம் ஆகிய மூன்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போன் தகவல் தொடர்பில் உள்ள வாட்ஸ் அப் மற்றும் வைபர் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
The Iraqi government has blocked all social media networks over fears that the Islamic State of Iraq and the Levant (Isis) was using the outlets to organise their insurgency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X