For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில் நடந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவு அரசியல் பயிலரங்க கூட்டம்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: குவைத் இந்தியன் சோஷியல் ஃபோரம் சார்பாக அரசியல் பயிலரங்க கூட்டம் அதன் உறுப்பினர்களுக்கு தஸ்மா டீச்சர்ஸ் சோசைட்டியில் வைத்து 30-10-2015 அன்று மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

ISF meet held in Kuwait

நிகழ்ச்சிக்கு இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவு தலைவர் ஷகீல் அஹ்மத் தலைமை தாங்கினார். தொடக்கமாக அமீர் ஹம்சா அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மத்திய கமிட்டி தலைவர் அப்துல் சலாம் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். அடுத்ததாக அப்துர் ரகுமான் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.

ISF meet held in Kuwait

தொடர்ச்சியாக சிக்கந்தர் மற்றும் அப்துல்லாஹ் ஆகியோர் முறையாக "இந்திய அரசியல்" மற்றும் "நாமும் நமது எதிர்கால திட்டமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவர்கள் தங்களது உரையில், இந்தியாவில் தற்போதுள்ள மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்கும், இந்துத்துவ கொள்கைகளை நிறுவ துடிக்கும் அவர்களின் போக்கும், அதை நாம் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

ISF meet held in Kuwait

இறுதியாக ஷகீல் அஹ்மத் அவர்களின் முடிவுரையுடனும், பரக்கத்துல்லாஹ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சி முழுவதையும் அன்வர் சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
Indian Social Forum's political workshop was held in Kuwait on october 30th. Hundreds attended the workshop and made it a great success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X