For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு சப்ளை செய்யும் 20 நாடுகள்.. இந்தியாவும் அடக்கம்!

Google Oneindia Tamil News

பெய்ரூட்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு 20 நாடுகளிலிருந்து வெடிகுண்டுகள் உள்ளிட்டவை சப்ளை ஆகிறதாம். இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் சிலவும் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 20 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதம், வெடிகுண்டு உள்ளிட்டவற்றை பெருமளவில் சப்ளை செய்கின்றனவாம்.

கேபிள் வயர்கள் வேதிப் பொருட்கள், பிற சாதனங்கள் இந்த 20 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிலிருந்துதான் ஐஎஸ் தீவிரவாதிகளுக்குப் போகிறதாம். பல அரசு நிறுவனங்களிலிருந்து திருடியும் இவற்றை அனுப்புகிறார்களாம்.

ஐரோப்பிய யூனியன் ஆய்வு

ஐரோப்பிய யூனியன் ஆய்வு

இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் சார்பாக ஒரு ஆய்வு நடத்ப்பட்டது. அதில் துருக்கி, பிரேசில், அமெரி்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 51 நிறுவனங்கள் தயாரிக்கும் 700 வகையான பொருட்கள் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு சப்ளை ஆகிறதாம்.

செல்போன் - கெமிக்கல்

செல்போன் - கெமிக்கல்

செல்போன், வேதிப் பொருள் உள்பட பல பொருட்கள் இதில் அடக்கம் என்று சிஏஆர் எனப்படும் அந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 மாத காலமாக இந்த ஆய்வை அந்த நிறுவனம் நடத்தியது.

ஈராக் - சிரியா

ஈராக் - சிரியா

ஈராக் மற்றும் சிரியாவின் பெரும்பாலான பகுதிகளைப் பிடித்து வைத்து இஸ்லாமியக் குடியரசை ஐஎஸ் அமைப்பினர் ஏற்படுத்தியுள்ளனர். இந்த இரு நாடுகளும் துருக்கியுடன் எல்லையைக் கொண்டுள்ளன. துருக்கி நேட்டோ உறுப்பு நாடு ஆகும்.

தீவிரக் கண்காணிப்பு

தீவிரக் கண்காணிப்பு

துருக்கி தனது நாட்டு எல்லை வழியாக எந்த ஆயுதமும் போகாத வகையில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் துருக்கியைச் சேர்ந்த 13 நிறுவனங்களிலிருந்தும் ஆயுதங்கள் போவதாக தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் 7

இந்தியாவில் 7

இந்தியாவில் மொத்தம் 7 நிறுவனங்களிலிருந்து பல்வேறு வகையான சாதனங்கள், உதிரிப் பொருட்கள், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு சப்ளை ஆவதாகவும் அந்த ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ரொம்ப ஈசியாக கிடைக்கிறதாம்

ரொம்ப ஈசியாக கிடைக்கிறதாம்

சிஏஆர் அமைப்பின் செயல் இயக்குநர் ஜேம்ஸ் பேவன் கூறுகையில் முன்பு போல இல்லை. இப்போது ஐஎஸ் அமைப்புக்குத் தேவையான அனைத்துமே மிக எளிதாக கிடைத்து விடுகிறது. யாரையும் நம்பி அவர்கள் இல்லை. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் அவர்களுக்கு உதவ நிறைய நிறுவனங்கள் உள்ளன என்றார்.

சீனா - ரஷ்யா

சீனா - ரஷ்யா

ஐஎஸ் அமைப்புக்கு உதவி செய்யும் நிறுவனங்களின் நாடுகள் வரிசையில் ரஷ்யா, சீனா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா, செக், ருமேனியா, பிரேசில், நெதர்லாந்து ஆகியவையும் அடக்கம்.

English summary
Companies from 20 countries are involved in the supply chain of components that end up in Islamic State explosives, a study found today, suggesting governments and firms need to do more to track the flow of cables, chemicals and other equipment. The European Union-mandated study showed that 51 companies from countries including Turkey, Brazil, and the United States produced, sold or received the more than 700 components used by Islamic State to build improvised explosive devices (IEDs).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X