For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியாவில் எரிவாயு கிணறுகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள்!

By Mathi
Google Oneindia Tamil News

டமாஸ்கஸ்: சிரியாவின் மத்திய மாகாணமாகிய ஹோம்ஸில் மூன்று முக்கிய எரிவாயு கிணறுகளைக் நேற்று ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள், இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை பிரகடனம் செய்துள்ளனர். தொடர்ந்தும் சிரியா, ஈராக்கின் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்ற யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் சிரியா, ஈராக், குர்திஷ்தான் படைகளுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் களத்தில் குதித்துள்ளன.

Islamic State captures three gas wells in Syria

இருப்பினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இந்த நிலையில் ஹோம்ஸ் மாகாணத்தின் பல்மிரா கிழக்குப் பகுதியில் மூன்று முக்கிய எரிவாயு கிணறுகளையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்லனர்.

இந்த எரிவாயு கிணறுகளை ஒட்டிய சிரியாவின் மிக முக்கியமான அல் ஷயீர் இயற்கை எரிவாயு வயலை கடந்த ஜூலை 17-ந் தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்தனர். ஆனால் ஒரு வார யுத்தத்துக்குப் பின்னர் ஜுலை 26-ந் தேதி சிரியா ராணுவம் மீண்டும் எந்த எரிவாயு வயலைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Islamic State(IS) militants on Tuesday captured three gas wells in Syria's central province of Homs, media reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X