For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனாவிற்கு எதிராக.. இஸ்ரேல் உருவாக்கிய "CD24" மருந்து.. சோதனை செய்யப்பட்ட எல்லோரும் குணமடைந்தனர்!

Google Oneindia Tamil News

டெல் அவிவ்: இஸ்ரேலில் கொரோனாவிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் மருந்து ஒன்று பெரிய அளவில் பலன் அளிக்க தொடங்கி உள்ளது. EXO-CD24 என்ற இந்த மருந்து கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் நல்ல பலன் அளிக்க தொடங்கி உள்ளது.

Recommended Video

    Coronaவிற்கு எதிராக EXO-CD24! Israel சோதனை | OneIndia Tamil

    இஸ்ரேலில் உள்ள இச்சிலோவ் மெடிக்கல் சென்டர், கொரோனா தொடர்பான பல்வேறு மருத்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு மருந்துகளை இந்த ஆராய்ச்சி மையம் சோதனை செய்து வருகிறது.

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்.. இன்று நல்ல மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் ரிப்போர்ட் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்.. இன்று நல்ல மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் ரிப்போர்ட்

    இந்த ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியர் நதீர் அர்பெர் மூலம் உருவாக்கப்பட்ட மருந்துதான் EXO-CD24 ஆகும். வாய் வழியாக ஆஸ்துமா மருந்து போல சுவாசித்து எடுத்துக்கொள்ள கூடிய மருந்தாகும் இது.

    எப்படி

    எப்படி

    ஒரு நாளுக்கு இரண்டு தடவை என்று 5 நாட்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மருந்தின் முதல் கட்ட சோதனை முடிந்துள்ளது. இதுவரை இந்த மருந்து எடுத்த எல்லோரும் கொரோனாவில் இருந்து வேகமாக குணமடைந்து உள்ளனர். இந்த மருந்து முதலில் 30 பேருக்கு கொடுத்து சோதனை செய்யப்பட்டது.

    குணமடைந்தார்

    குணமடைந்தார்

    இவர்களில் பலர் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். சிலர் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் எல்லோரும் EXO-CD24 மருந்து எடுத்த பின் குணமடைந்து உள்ளனர். இதில் 29 பேர் மருந்து எடுத்து 3-5 நாட்களில் குணமாகி உள்ளனர்.

    கொரோனா நோயாளிகள்

    கொரோனா நோயாளிகள்

    பொதுவாக கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகளின் உடலில் எதிர்பார்ப்பு சக்தி கட்டுக்கடங்காமல் அதிகரித்து அது கொரோனா நோயாளிகளின் உடலில் எதிர்வினையை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்குகிறது. "இம்யூன் ஓவர் ரியாக்சன்" என்று அழைக்கப்படும் இதை cytokine storm என்று கூறுவார்கள். கொரோனா உடலில் புகுந்ததும் எதிர்பார்ப்பு சக்தி கட்டுக்கடங்காமல் அதிகரித்து, கடைசியில் அது நோயாளிகளுக்கே எதிராக திரும்பி, மரணத்திற்கு வழி வகுக்கும்.

     மருந்து

    மருந்து

    இந்த நிலையில் EXO-CD24 மருந்து இதை தடுக்கிறது. இதில் உள்ள எக்ஸோசோம்ஸ் இந்த ஓவர்ரியாக்ஸனை கட்டுப்படுத்துகிறது. CD24 என்ற புரதத்தை இது இதயத்தில் செலுத்துகிறது. இந்த புரதம் உடலின் எதிர்ப்பு சக்தியை முறைப்படுத்துகிறது. இதன் மூலம் cytokine storm கட்டுப்படுத்தப்பட்டு, இறப்பு தடுக்கப்படுகிறது. அதாவது "இம்யூன் ஓவர் ரியாக்சன்" கட்டுப்படுத்தப்பட்டு, இறப்பு தடுக்கப்படுகிறது.

    கொரோனா

    கொரோனா

    கொரோனா உடலில் புகுந்ததும் எதிர்ப்பு சக்தி தீவிரம் அடைந்து, அது உடலுக்கே எதிராக திரும்புவதை EXO-CD24 மருந்து சில நிமிடங்களில் தடுக்கிறது. இதை எடுத்துக்கொள்வதன் மூலம் நேராக, நுரையீரலுக்கே சென்று EXO-CD24 வேலை செய்கிறது. இதனால் நேராக எதிர்ப்பு சக்தி துரிதமாக கட்டுப்படுத்தப்படுகிறது. அதோடு இதன் காரணமாக EXO-CD24 எந்த விதமான பக்க விளைவுகளும் இதுவரை ஏற்படவில்லை.

    சோதனை எப்படி

    சோதனை எப்படி

    மருந்து எடுத்துக்கொண்ட 30 பேரில் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இதனால் இந்த மருந்து அடுத்த கட்ட சோதனைக்கு சென்றுள்ளது. அதே சமயம் இப்போதே இந்த EXO-CD24 மருந்தை நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வழங்க தொடங்கி உள்ளனர்.

    தடுக்கிறது

    தடுக்கிறது

    EXO-CD24 மருந்து எடுப்பதன் மூலம் கொரோனா நோயாளிகளின் உடல் மோசமாவது தடுக்கிறது. அதேபோல் அவர்கள் வேகமாக குணமடைகிறார்கள். இதனால் கொரோனா வந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவது தடுக்கப்படும். அதேபோல் உயிர் இழப்புகள் முற்றிலுமாக தடுக்கப்படும் என்று இஸ்ரேல் மருத்துவர்கள் கூறியுள்ளனர்,

    English summary
    Israel's new drug CD24 cured all patients affected with Covid 19 Israel's new drug CD24 cured all patients affected with Covid 19 in the first phase of trial.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X