உயிரோடு எரிக்கப்பட்ட 1.60 லட்சம் பேர்! 'ஆவியாக மாறியதால்' அலறும் பேய் தீவு! டூரிஸ்ட்களுக்கு அரசு தடை
ரோம்: உலகம் முழுவதும் பல விசித்திரங்கள் இருக்கின்றன. அறிவியல் மற்றும் விஞ்ஞானிகளால் தீர்க்கப்பட முடியாதவையாக அவை இன்றளவும் நீடிக்கின்றன. அந்த வரிசையில் மக்களை எப்போதும் பயமுறுத்தும் தீவுதான் இத்தாலியின் 'போவெக்லியா' தீவு. இந்த தீவில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு அரசு தடை விதித்துள்ளது.
இங்கு உயிருடன் இருப்பவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் இரவு நேரத்தில் எவ்வித வித்தியாசமும் தெரிவதில்லையென அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.
இந்த அறிவியல் யுகத்திலும் பெரும்பாலானோர் பயப்படும் பகுதி என்றால் அது, இத்தாலியின் 'போவெக்லியா' தீவுதான். இந்த தீவுக்கு சென்றவர்கள் இதுவரை யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மர்ம தீவு
இந்த மர்ம தீவு வெனிஸ் வளைகுடாவில் இத்தாலியில் வெனிஸ் மற்றும் லிடோ இடையே அமைந்திருக்கிறது. வெனிஸ் நகரத்திலிருந்து வெறும் 16 கி.மீ தொலைவில்தான் இந்த தீவு அமைந்திருக்கிறது. அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் இங்கு சென்றுவிடலாம். ஆனால் இத்தாலி அரசு இங்கு பயணிகள் செல்வதற்கு தடை விதித்துள்ளது. காரணம் மேலே குறிப்பிட்டதுதான். இந்த தீவுக்கு நிறைய கதைகள் இருக்கின்றன. அவை இப்போதும் மக்களை பயமுறுத்தி வருகின்றன.

கரும்புள்ளி
16ம் நூற்றாண்டுக்கு முன்னதாக உலகம் முழுவதும் 'பிளேக்' நோய் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது. ஆனால் இதிலிருந்து எஸ்கேப் ஆகி வந்த இந்த தீவு 'கரும்புள்ளி' எனும் தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நாளுக்கு நாள் மக்கள் இந்த நோயால் பாதிப்படைய தொடங்கினர். இந்த வகை நோய்கள் 'பெண் மணல் ஈக்களால்' பரவியது. இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் நிச்சயம் மரணம் ஏற்படும்.

கொலை
16ம் நூற்றாண்டில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே தொற்று மக்களை வேகமாக பாதித்தது. பலர் உயிரிழக்க தொடங்கினர். இதிலிருந்து மற்ற மக்களை எப்படி காப்பாற்றுவது என்று அப்போதைய ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை. எனவே தொற்று பரவாமல் இருக்க கொடூரமாக சிந்தித்து, 1.60 லட்சம் மக்களை அவர்கள் இந்த தீவில் வைத்து உயிருடன் எரித்தனர். இங்கிருந்துதான் பிரச்னை தொடங்கியது. இதற்கு பின்னர் இந்த தீவில் நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மர்மம்
அதாவது தீவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் திடீரென மர்மமாக உயிரிழப்பது, இரவில் பயங்கர அழுகுரல் சத்தம் வருவது, எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பது என தீவில் என்ன நடக்கிறது என்பை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனையடுத்து வந்த ஆட்சியாளர்கள் 'இது என்ன பைத்தியகாரத்தனம்' என இதையெல்லாம் காதில் வாங்காமல் ஒரு மனநல மருத்துவமனையை கட்டினர். ஆனால் எல்லாம் 1960 வரை மட்டுமே. ஏனெனில் மருத்துவமனை பணியாளர்களுமே மர்ம அனுபவத்தை உணர்ந்துள்ளனர். இந்த தீவில் இரவு நேரங்களில் உயிருடன் இருப்பவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை கண்டுபிடிக்க கூட முடியவில்லை என்று அச்சத்தோடு அவர்களே கூறியுள்ளனர்.

பயம்
இவ்வாறு தொடர்ச்சியான புகார்கள் வந்ததையடுத்து மருத்துவமனையும் மூடப்பட்டது. 60களுக்கு பின்னர் இங்கு மக்கள் செல்வது தவிர்க்கப்பட்டது. ஆனால் இன்றும் அந்த தீவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களும் மருத்துவ பணியாளர்கள் கூறியதைதான் கூறுகிறார்கள். உயிரிழந்த 1.60 லட்சம் மக்களும் பேயாக இங்கு சுற்றி திரிவதாகவும் கூறுகின்றனர். துடிக்க துடிக்க இத்தனை பேர் எரித்துக் கொலை செய்யப்பட்டதால், அவர்களின் ஆன்மா அங்கே உலவுகிறது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உலகில் எத்தனையோ மர்மமான விஷயங்கள் இருந்தாலும் இந்த தீவை போல அச்சுறுத்தும் வேறெதுவும் இல்லையென்று பலர் கூறுகின்றனர்.
என்ன மக்களே இந்த தீவுக்கு ஒரு சுற்றுலா போவோமா?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications