For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2015ம் ஆண்டிலேயே மிகவும் ஹாட்டான மாதம் ஜூன்தான்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்த வருடத்தில் மிகவும் உஷ்ணமான மாதம் என்ற பெயரை ஜூன் மாதம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த ஜூன் மாதத்தில் அதிக அளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளதாம்.

பூமி இந்த ஜூன் மாதத்தில்தான் மிகவும உஷ்ணமாக இருந்ததகா கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். மேலும் இந்த ஆண்டின் முதல் பாதியிலும் கூட ஜூன் மாதம்தான் அதிக உஷ்ணம் மிகுந்த மாதமாக இருந்ததாம்.

இதுகுறித்து தேசிய கடலியல் மர்றும் சூழல் நிர்வாக கழக விஞ்ஞானி ஜெஸ்ஸிகா பிளன்டன் கூறுகையில், "ஜூன் மாதம் மிகவும் உஷ்ணமானதாக இருந்துள்ளது. உலகம் முழுதும் ஜூன் மாதம்தான் சூடாக இருந்துள்ளது.

3வது மாதம்...

3வது மாதம்...

மேலும் இந்த வருடத்தில் அதிக உஷ்ணம் பதிவான 3வது மாதமாக ஜூன் திகழ்கிறது. இது ஒரு சாதனை அளவாகும். பூமியில் உஷ்ணம் அதிகரித்திருப்பதால் கடல் நீர் மட்டமும் கூட அதிகரித்துள்ளது.

சென்ற வருடத்தை விட அதிகம்...

சென்ற வருடத்தை விட அதிகம்...

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவானதை விட அதிக அளவிலான வெப்ப நிலை இந்த ஜூனில் பதிவாகியுள்ளது. ஜூன் மாதத்தில் உலக அளவிலான சராசரி வெப்பநிலை 61.48 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 0.22 டிகிரி பாரன்ஹீட் அதிகமாகும்.

57.83 பாரன்ஹீட்...

57.83 பாரன்ஹீட்...

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத வெப்ப நிலை கடந்த 2010ம் ஆண்டின் முதல் ஆறு மாத வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது. அதாவது 57.83 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது.

எல்நினோ...

எல்நினோ...

மேலும் இந்த ஆண்டு எல்நினோ வலுவாக இருக்கும் என்றும், பாதிப்பு பலமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இங்கெல்லாம் பரவாயில்லை...

இங்கெல்லாம் பரவாயில்லை...

உலக அளவில் பல நாடுகளில் ஜூன் மாதம் வெப்பாமாக இருந்தாலும் கூட ஸ்பெயின் ஆஸ்திரியா, ஆசியாவின் சில பகுதிகள், ஆஸ்திரேியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெப்பநிலை சற்று குறைவாகவே இருந்துள்ளது.

மிகப்பெரிய வெப்பச்சாவு...

மிகப்பெரிய வெப்பச்சாவு...

பாகிஸ்தானின் தென் பகுதியில் வீசிய கடும் அனல் காற்றுக்கு 1200 பேர் பலியானார்கள். கடந்த 1900ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த எட்டாவது மிகப் பெரிய வெப்பச் சாவு இது.

136 ஆண்டுகளுக்குப் பிறகு...

136 ஆண்டுகளுக்குப் பிறகு...

மே மாதத்தில் இந்தியாவில் வீசிய வெப்ப அலையில் சிக்கி 2000 பேர் உயிரிழந்தனர். 136 ஆண்டுகளுக்குப் பிறகு மே மற்றும் மார்ச் மாத வெப்ப நிலை அதிகமாக இருந்தது.

சாதனை...

சாதனை...

கடந்த 2000மாவது ஆண்டுக்குப் பிறகு 2 முறை பூமி மாதாந்திர வெப்பநிலையில் சாதனை படைத்துள்ளது. இருப்பினும் மாதாந்திர குளிர்ச்சியில் இதுவரை 1916க்குப் பிறகு எந்த சாதனையும் படைக்கப்படவில்லை.

English summary
Earth dialed the heat up in June, smashing warm temperature records for both the month and the first half of the year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X