For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ.கே... சுவாசிலாந்து மன்னருக்கு 15வது மனைவி ரெடி!

Google Oneindia Tamil News

லொபாம்பா, சுவாசிலாந்து: சுவாசிலாந்து மன்னர் மூன்றாம் மெஸ்வதி தனது 15வது திருமணத்திற்குத் தயாராகி விட்டார். 45 வயதான இவர் 18 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளார்.

இதுவரை 14 திருமணங்களைச் செய்து விட்டார் மெஸ்வதி. இப்போது 15வது திருமணத்திற்கு ரெடியாகியுள்ளார்.

14 மனைவியரில் ஒருவர் மட்டும் மெஸ்வதியிடமிருந்து தப்பி விட்டார். மிச்சமுள்ள 13 பேருடன்தான் தற்போது குடும்பம் நடத்தி வருகிறார் மெஸ்வதி. தற்போது அவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயரவுள்ளது.

சுகவாசி மன்னர்

சுகவாசி மன்னர்

சுவாசிலாந்து நாட்டு மன்னர் மெஸ்வதி பரம சுகவாசி. அடிக்கடி திருமணம் செய்து கொள்வது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்றாகும்.

டான்ஸ் ஆட வைத்து தேர்வு

டான்ஸ் ஆட வைத்து தேர்வு

இவர் மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் விதமே அலாதியானது. அதாவது நிர்வாணமாக இவரது முன்பு டான்ஸ் ஆடுவார்கள் எண்ணற்ற பெண்கள். அவர்களைப் பார்த்து ஆராய்ந்து தனக்குப் பிடித்த பெண்ணைத் தேர்வு செய்வார் மெஸ்வதி.

அப்படித்தான் 15வது மனைவியும்

அப்படித்தான் 15வது மனைவியும்

அதேபோன்ற ஒரு டான்ஸ் நிகழ்ச்சியை வைத்துத்தான் தற்போது தான் மணக்கவுள்ள 18 வயதுப் பெண்ணான சின்டிஸ்வா டிலாமினியைத் தேர்வு செய்துள்ளாராம் மெஸ்வதி.

அழகிப் போட்டியில் பங்கேற்றவர்

அழகிப் போட்டியில் பங்கேற்றவர்

டிலாமினி உள்ளூர் அழகிப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டவரா். படித்துள்ளாராம்.

18 வயதிலிருந்தே மன்னர்தான்

18 வயதிலிருந்தே மன்னர்தான்

மெஸ்வதி 1986ம் ஆண்டு அரியணை ஏறினார். அப்போது அவருக்கு வயது 18. இன்று வரை அவர்தான் மன்னராக இருக்கிறார். உலக அளவில் மிகவும் இளம் வயது மன்னர் இன்றைய தேதியில் இவர்தான்.

ஆப்பிரிக்காவின் கடைசி சாம்ராஜ்யம்

ஆப்பிரிக்காவின் கடைசி சாம்ராஜ்யம்

ஆப்பிரிக்காவில் மன்னர் ஆட்சி முறை அமலில் உள்ள ஒரே நாடு இந்த சுவாசிலாந்துதான்.

14வது மனைவியாக சேருகிறார்

14வது மனைவியாக சேருகிறார்

ஏற்கனவே மெஸ்வதியின் அரண்மனையில் 13 மனைவிமார்கள் உள்ளனர். ஒரு மனைவி தப்பி ஓடி விட்டார். மெஸ்வதியை எதிர்த்து அவர் போராட்டமும் கூட நடத்தியுள்ளார். இந்த நிலையில் 14வது ராணியாக சேருகிறார் புதிய மனைவி சின்டிஸ்வா.

100 மில்லியன் டாலர் சொத்து

100 மில்லியன் டாலர் சொத்து

மெஸ்வதியின் அரண்மனையின் மதிப்பு 100 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.

ஆனால் நாடெல்லாம் பட்டினி, பஞ்சம்

ஆனால் நாடெல்லாம் பட்டினி, பஞ்சம்

ஆனால் சுவாசிலாந்து மிகவும் மோசமான பஞ்சம் மற்றும் பட்டினி, வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குட்டி நாடாகும். இங்குள்ள 10.2 லட்சம் மக்களும் வறுமையில்தான் உழன்று கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The 45-year old will wed the 18-year old Sindiswa Dlamini, who took part in a beauty pageant. She is reported to have completed her education. At a previous traditional festival she was amongst the girls dancing for the king and his guests. This involved her appearing semi-naked and adorned with red feathers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X