நியூயார்க்கில் நடந்து சென்றவர்கள் மீது டிரக்கை விட்டு மோதி தீவிரவாத தாக்குதல்- 8 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் பாதசாரிகள் செல்லும் பாதையில் லாரியை ஓட்டி வந்து கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க் உலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் பாதசாரிகள் செல்லும் ரோட்டில் பாய்ந்து வந்த டிரக் ஒன்று நடந்து வந்தவர்களை எல்லாம் இடித்து தள்ளியது. மேலும் பள்ளி பேருந்து மீதும் பயங்கரமாக மோதியது.

Manhattan Terror Attack 8 killed

இந்த மோசமான தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலை ஏற்படுத்திய நபர், காரில் இருந்து இறங்கி கையில் போலித் துப்பாக்கியுடன் மக்களை நோக்கி மிரட்டினார்.
இதையடுத்து போலீசார் அவரை வயிற்றில் சுட்டுபிடித்தனர்.

பிடிபட்டுள்ள நபரின் புகைப்படத்தை வெளியிட காவல்துறையினர் மறுத்து விட்டனர். பிடிபட்டுள்ள நபர் தீவிரவாதி என்றும் நியூயார்க் நகர காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் ஒரு பயங்கரவாத சம்பவம் என்று கூறியுள்ள நியூயார்க் நகர மேயர், பிடிப்பட்ட இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிராத்தனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த 8 பேர்களில் 5 பேர் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மன்ஹாட்டன் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மோடி, காயமடைந்தோர் விரைவில் நலம்பெற பிரத்தனை செய்வதாக மோடி கூறியுள்ளார்.

நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் கட்டிடம் மீது கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பயணிகள் விமானத்தை மோதச்செய்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A driver plowed a pickup truck down a crowded bike path along the Hudson River in Manhattan on Tuesday, killing eight people and injuring 11 before being shot by a police officer.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற