For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை: நாசா கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பூமிக்கு அருகே சுற்றி வரும் மிக அபாயகரமான விண்பாறை ஒன்றை அமெரிக்காவின் நாசா அனுப்பிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்வெளி குறித்து ஆராய்வதற்காக நியோவைஸ் என்ற செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியது. அந்த செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் நியோவைஸ் அனுப்பிய புகைப்படம் ஒன்றில், பூமியில் இருந்து 43 மில்லியன் மைல் தூரத்தில் அபாயகரமான விண்பாறை ஒன்று சுற்றிவருவது தெரியவந்துள்ளது.

விண்பாறை....

விண்பாறை....

2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது.

உறுதி....

உறுதி....

அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படம் பிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

கருப்பு விண்பாறை...

கருப்பு விண்பாறை...

650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கிறது இந்த விண்பாறை. இதன் வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

அபாயகரமானது....

அபாயகரமானது....

சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என்று விண்பாறை மற்றும் வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
NASA's latest sky-mapping spacecraft has discovered a new potentially hazardous asteroid, 43 million kilometres from Earth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X