For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எச்ஐவி வைரஸ் பரவலைத் தடுக்கும் புரதம்.. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: எச்ஐவி பரவாமல் தடுக்கக் கூடிய புரதம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது எச்ஐவி பரவலை மிக மிக நிதானமாக்கி நம்மைக் காக்கவும் உதவுகிறதாம்.

இந்த புரதத்தை வைத்து எச்ஐவி தடுப்பு தெரப்பிகளை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எச்ஐவி 1 வைரஸ் பரவலை இந்த புரதம் தடங்கல்படுத்தி தாமதிக்கச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இது எப்படி செயல்படுகிறது என்பதை இன்னும் கண்டறிய முடியவில்லை. எப்படி இது வைரஸ் பரவலை தடுக்கிறது என்றும் தெரியவில்லையாம்.

ஆய்வுகள்...

ஆய்வுகள்...

தொடர்ந்து இது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன என்று மிச்சிகன் பல்கலைக்கழக மூலக்கூறு மரபியல் மற்றும் மைக்ரோபயாலஜி துறை உதவிப் பேராசிரியரும், ஆய்வின் இணை ஆய்வாளருமான யாங் ஹூய் ஜெங் கூறியுள்ளார்.

எல்மானி...

எல்மானி...

இந்தப் புரதத்தின் பெயர் எர்மானி (ERManI). இந்த புரதமானது, எச்ஐவி வைரஸ் பல்கிப் பெருகுவதை தடுக்கிறது. இதன் மூலம் வைரஸ் பரவல் தடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தகக்து.

எய்ட்ஸ்...

எய்ட்ஸ்...

இப்போதைக்கு எச்ஐவியைத் தடுக்க மருந்தே கிடையாது. அது வந்து விட்டால் கடைசி வர போகாது. எய்ட்ஸ் நோய் வந்து மரணத்தையும் தழுவ நேரிடும். தற்போது சில தெரப்பிகள் உள்ளன.

தள்ளிப் போட முடியும்...

தள்ளிப் போட முடியும்...

ஆனால் இதனால் மரணத்தைத் தடுக்க முடியாது. மாறாக தள்ளிப் போட மட்டுமே முடியும். நோயைத் தீர்க்க இதுவரை எந்த மருந்தும் இல்லை என்பதே நிலவரம்.

உடல் உபாதைகளும்...

உடல் உபாதைகளும்...

தற்போது பல்வேறு மருந்துகள் உள்ளன. இவற்றை வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டும். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும். பல உடல் உபாதைகளும் கூடவே வந்து சேரும்.

சந்தோஷச் செய்தி...

சந்தோஷச் செய்தி...

இந்த நிலையில்தான் நமது உடலில் உள்ள புரதமே எச்ஐவி பரவலைத் தடுக்கிறது என்ற சந்தோஷச் செய்தி மிச்சிகனிலிருந்து வந்து சேரந்துள்ளது.

English summary
Researchers have discovered a protein that may slow the spread of the human immunodeficiency virus (HIV), thereby revealing a target for developing natural therapies against the deadly virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X