For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலை குலைந்த நேபாளம்.. நிலநடுக்கத்திற்கு முன்பும், பின்பும்.. சோகம் கக்கும் சாட்டிலைட் படங்கள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாளத்தில் மையம் கொண்டு தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கத்தால் அங்கு பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் நினைவு சின்னங்கள் பலவும் அழிந்துள்ளன. இந்த சூழ்நிலையில், அந்த நாட்டின் பல்வேறு நினைவு சின்னங்களின் முந்தைய மற்றும் பிந்தைய தோற்றத்தை ஒப்பிட்டு பார்த்தால், அதன் பாதிப்பை நன்கு உணர முடியும்.

இந்த நிலநடுக்கத்தால், நேபாள நாட்டின் முதுகெலும்பான சுற்றுலாத்துறைக்கு கடும் பாதிப்பும் ஏற்படும் என்பது இந்த செயற்கைக்கோள் படங்களை பார்த்தால் தெரிகிறது.

தலைநகரில்

தலைநகரில்

தலைநகர் காத்மாண்டுவில் புகழ்பெற்ற தர்பார் ஸ்கொயர் உள்ளது. 2013ம் ஆண்டு பிப்ரவரி 13ம்தேதி, செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ஒருபடமும், நேற்று எடுக்கப்பட்ட ஒரு படமும் வித்தியாசத்தை உணர்த்துவதை பாருங்கள்.

தரஹரா

தரஹரா

காத்மாண்டுவில் 1892ம் ஆண்டு கட்டப்பட்ட 9 அடுக்கு கொண்ட தரஹரா டவர் மிகவும் பேமஸ். அதில் ஏறி நின்று நகரையே சுற்றி பார்ப்பார்கள் சுற்றுலா பயணிகள். அதன் முந்தைய மற்றும் பிந்தைய தோற்றங்களை பார்த்தால், உருக்குலைந்து போனது தெரியவரும்.

மைதானமா இது..

மைதானமா இது..

காத்மாண்டுவிலுள் ஸ்டேடியத்தில்தான் தற்காலிக ஷெட்டுகள் போடப்பட்டுள்ளன. அங்கு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே நிலநடுக்கத்துக்கு முந்தைய ஸ்டேடிய படம் மற்றும் தற்போதைய ஸ்டேடிய படத்தை பார்த்தால், அது ஒரு மைதானம் என்பதே புரியாது.

பழங்கால நகரம்

பழங்கால நகரம்

காத்மாண்டுவின் கிழக்கு பகுதியில் உள்ள பழங்கால நகரம் பக்தாபூர். இங்குள்ள 80 சதவீத பழைய கட்டிடங்கள், கோயில்கள் இடிந்துள்ளன. 2014 அக்டோபரில் எடுக்கப்பட்ட படத்தையும், தற்போதைய படத்தையும் பார்த்தால் மாற்றம் தெரியும்.

English summary
Many of the country's historic sites have been severely damaged, including temples and monuments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X