For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் இளைஞருக்கு 48 மணி நேரத்தில் 2 முறை கொரோனா... எப்படி... அதிர்ச்சி தகவல்!!

Google Oneindia Tamil News

நெவாடா: கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு உடனடியாக இரண்டாவது முறை வந்தால், பாதிப்பு பெரிய அளவில் இருக்கும். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வந்த ஒருவருக்கு மீண்டும் வந்துள்ளது. இதுகுறித்த ஆய்வு முடிவுகள் லான்செட் தொற்று நோய் இதழில் வெளியாகியுள்ளது. ஒருமுறை கொரோனா வைரஸ் ஒருவரை பாதித்து, அவர் அதில் இருந்து மீண்டு வந்துவிட்டால், அவருக்கு அதனால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும் என்று உத்தரவாதம் அளித்து விட முடியாது.

சின்ன சின்ன ஆசை.. அழகான பெண்களை முத்தமிட ஆசை.. கொரோனா நெகட்டிவ்வானதும் டிரம்புக்கு குசும்புதான்! சின்ன சின்ன ஆசை.. அழகான பெண்களை முத்தமிட ஆசை.. கொரோனா நெகட்டிவ்வானதும் டிரம்புக்கு குசும்புதான்!

மரபணு

மரபணு

அமெரிக்காவின் நெவாடாவில் 25 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவரை கொரோனா தொற்று பாதித்த 48 மணி நேரத்திற்குப் பின்னர் வேறு வகையான மரபணு வைரஸ் பாதித்துள்ளது. முதலில் ஏற்பட்ட வைரஸை விட இரண்டாவது ஏற்பட்ட வைரஸின் வீரியம் அதிகமாக இருந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, ஆக்சிஜன் செலுத்தபட்டு வருகிறது.

நெதர்லாந்து

நெதர்லாந்து

இதேபோன்று உலக அளவில் நான்கு பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெல்ஜியம், நெதர்லாந்து, ஹாங்காங், ஈகுவேடார் ஆகிய நாடுகளில் தலா ஒருவருக்கு இதுபோன்று தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான வைரஸ் தாக்கம் ஏற்கனவே பாதிப்பில் இருக்கும் நாடுகளின் மீது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு

நோய் எதிர்ப்பு

இதுகுறித்து நெவாடா அரசு பொது மருத்துவமனை பரிசோதனை மைய ஆய்வாளர் மார்க் பண்டோரி, ''கொரோனா தொற்றுக்கு இன்னும் தடுப்பூசி இல்லாத நிலையில் இதுபோன்ற வைரஸ் தாக்கம் மேலும் தடுப்பூசி கண்டறிவதில் சிக்கலை உருவாக்கும். தொற்று வந்தவர்களுக்கு எந்தளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதை ஆராய வேண்டியது இருக்கிறது. ஏன் இது மாதிரியான இரண்டாவது தொற்று கடுமையாக பாதிக்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா

கொரோனா

அம்மை போன்ற தொற்று நோய்களுக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் வகையில் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன. ஆனால், கொரோனாவுக்கு அதுபோல் கொண்டு வரமுடியுமா என்பது சந்தேகமே என்று பல ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்குக் காரணம் கொரோனா வைரஸ் அடிக்கடி தனது மரபணுவை மாற்றிக் கொள்வதுதான் என்று கூறப்படுகிறது.

English summary
New US study says that Covid-19 Reinfection would be more Severe needs Oxygen Support
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X