நியூசிலாந்தில் முதன்முறையாக.. கொரோனா தினசரி பாதிப்பு 200-ஐ கடந்தது.. அதிகரிக்க காரணம் என்ன?
ஆக்லாந்து: உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா இன்னும் மக்களை மிரட்டி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா என வல்லரசு நாடுகளை அசைத்து பார்த்து விட்டது.
இந்தியாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து விட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ஆதிக்கம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. பல நாடுகள் புதிதாக கொரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன.

டெல்டா வகை கொரோனா
இதற்கு முக்கிய காரணம் கொரோனா தொற்று உருமாறி வருவதுதான். டெல்டா வகை கொரோனாதான் மீண்டும் தொற்று அதிகரித்து வருவதற்கு அதி முக்கிய காரணம். தற்போது இந்த டெல்டா வைரஸ்தான் நியூசிலாந்து நாட்டையும் பாடாய்ப்படுத்தி வருகிறது. உலகின் அனைத்து நாடுகளையும் கொரோனா கட்டி வைத்திருந்தாலும் நியூசிலாந்தில் அதிக பாதிப்பு ஏற்படவில்லை.

நியூசிலாந்தில் கொரோனா அதிகரிப்பு
அங்கு தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. கொரோனா வந்த காலத்தில் இருந்தே நியூசிலாந்தில் தினசரி பாதிப்பு 100-ஐ தாண்டாமல் இருந்தது. ஆனால் டெல்டா வைரஸ் அங்கு புகுந்ததனால் செப்டம்பர் மாதத்தில் இருந்து கொரோனா அதிவேகமாக அதிகரிக்க தொடங்கியது. முதன்முறையாக 100-ஐ கடந்த தினசரி பாதிப்பு இப்போது 200-ஐ கடந்து விட்டது.

முதன்முறையாக இரட்டை சதம்
நியூசிலாந்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான ஆக்லாந்தில் நாட்டில் அதிகபட்சமாக முதன் முறையாக 206 கொரோனா பாதிப்பு பாதிவாகி உள்ளது. இதுவே நியூசிலாந்து வரலாற்றில் பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். நியூசிலாந்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2500-ஐ கடந்துள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்த போதிலும் உருமாறிய கொரோனா அங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

78 சதவீதம் பேர் தடுப்பூசி
நியூசிலாந்தில் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 78 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். 89 சதவீதம் பேர் முதல் டோஸ் பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் பாராட்டு பெற்ற நியூசிலாந்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ தாண்டவில்லை. கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications