For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆரம்பத்திலேயே அசத்திய ஜெசிந்தா.. இன்று என்ன இப்படி சொல்றாரே?.. திடீரென முடிவெடுத்த நியூசிலாந்து

ஊரடங்கை அமல்படுத்த போவதில்லை என்று ஜெசிந்தா அறிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

வெலிங்டன்: ஒமிக்ரான் பரவ ஆரம்பித்தாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று நியூசிலாந்து பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே நம்மை அசர வைத்து வருபவர்தான் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா.. கொரோனா வைரஸை ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, இவர் கையாண்ட விதத்தை உலக நாடுகளே ஆச்சரியமாக பார்த்தன.

பிரதமர் ஜெசிந்தாவின் செயல்பாடுகள் அந்த அளவுக்கு பாராட்டை பெற்றன.. தொற்று தங்கள் நாட்டுக்குள் வந்ததுமே, 7 வாரங்கள் லாக்டவுன்களை அறிவித்தார்.. அதற்கு பிறகு பெரிதாக யாரும் அங்கு பாதிக்கப்படவில்லை..

கொங்கு மண்டல தளபதி! செந்தில்பாலாஜிக்கு புதிய அடைமொழி சூட்டிய கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு! கொங்கு மண்டல தளபதி! செந்தில்பாலாஜிக்கு புதிய அடைமொழி சூட்டிய கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு!

 தடுப்பு நடவடிக்கைகள்

தடுப்பு நடவடிக்கைகள்

இதே காலகட்டத்தில் அன்று, அதிபராக இருந்த டிரம்ப், இந்த வைரஸ் விஷயத்தில் அத்தனை அலட்சியம் காட்டினார்.. பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் "என்னை யாராவது சந்திக்க வந்தால் கை கொடுப்பேன் என்று கெத்தாக பேசி, கடைசியில் தொற்று பாதித்து ஐசியூவரை சென்று வந்தார்.. இப்படி பெரிய பெரிய நாட்டு அதிபர்களும், பிரதமர்களுமே கொரோனாவில் அலட்சியம் காட்டி வந்த நிலையில் ஜெசிந்தாவின் தடுப்பு நடவடிக்கைகள் உலக மக்களால் ஈர்க்கப்பட்டது.

சுற்றுலா

சுற்றுலா

கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளே திண்டாடி கொண்டிருந்தபோது, உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்து கொரோனா இல்லாத நாடாக மாறியது என்றால் அதற்கு காரணம் ஜெசிந்தா ஆர்டெர்ன் மட்டுமே.. நியூசிலாந்தை பொறுத்தவரை அது ஒரு சுற்றுலாவை நம்பி உள்ள நாடு என்றாலும், முதல் காரியமாக சுற்றுலாவை இழுத்து மூடினார்.. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனுக்குடன் கட்டுப்பாடுகளையும், விரைவான கொரோனா டெஸ்ட் முடிவுகளையும் அறிவித்து, அவர்களுக்கு சிகிச்சை தந்து, நியூஸிலாந்தை தொற்றில் இருந்து முழுமையாக மீட்டெடுத்தார்.

 டெல்டாவைரஸ்

டெல்டாவைரஸ்

இதன் விளைவு, கடந்த வருடம் பிப்ரவரியிலிருந்து ஒருத்தர் கூட, அங்கே கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை... எனினும், ஆகஸ்ட் மாதம் மறுபடியும் கொரோனா எட்டிப்பார்த்தது.. அதிலும் இந்தியாவை உலுக்கி போட்ட அதே டெல்டாதான், நியூசிலாந்தையும் மிரட்டியது.. மறுபடியும் கடுமையான ஊரடங்கை கையில் எடுத்தார் பிரதமர்.. தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும் என்றும், அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என்றும் அறிவித்தார்..

தடுப்பூசி

தடுப்பூசி

இப்போதைக்கு நியூசிலாந்தில் 93 சதவீதத்திற்கு மேல் அந்நாட்டு மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 52 சதவீதத்தினர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர்.. 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. ஆனால், அதற்குள் ஒமிக்ரான் தொற்று பீதி வந்துவிட்டது.. இந்த ஒமிக்ரான் டெல்டாவைவிட மோசம் என்பதால், நியூசிலாந்தில் நிலைமை முன்பு போல இல்லை.. என்னதான் லாக்டவுன் போட்டாலும், தொற்று முழுமையாக நீங்கும் நிலைமை வரவில்லை.. அதனால், வேறு வழியில்லாமல் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு ஜெசிந்தா வந்துவிட்டார் போலும்.

 கடினமான காலம்

கடினமான காலம்

செய்தியாளர்களிடம் பேசிய ஜெசிந்தா, "இந்த ஒமிக்ரான் முன்பை விட வித்தியாசமானது... அதிவீர்யமிக்கது.. அதிவேகமாக தாக்கக் கூடியது. இது நிச்சயம் கடினமாக இருக்கபோகிறது. கோவிட் மாறும்போது நாமும் மாற வேண்டியுள்ளது... ஆனால், இந்த முறை ஒமிக்ரான் காரணமாக கொரோனா பரவல் ஏற்பட்டாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை... அதனால் கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்க உள்ளோம்.,. கடைகள் திறப்பு, உள்ளூர் போக்குவரத்து வழக்கம் போல் இருக்கும். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

English summary
New zealand PM Jecinda Andern says govt wont implement lockdown
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X