உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை - மோடியிடம் உறுதியளித்த புடின்
உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருக்கிறார்
மாஸ்கோ: உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடலின் போது ரஷ்ய அதிபர் புதின் உறுதி அளித்துள்ளதாக ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு புடின் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளதாக ரஷ்யா தகவலை வெளியிட்டுள்ளது.
சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன் நாடு தற்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் நேட்டோ அமைப்புடன் இணைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றம்
உக்ரைனின் இந்த நடவடிக்கை அண்டை நாடான ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதி, உக்ரைனை ரஷ்யா எச்சரித்து வந்தது. மேலும், உக்ரைனைச் சுற்றி லட்சக்கணக்கான வீரர்களுடன் கூடிய ராணுவத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னரே நிறுத்திவைத்தது ரஷ்யா. இது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. போர் தொடுக்க வேண்டாம் என்று ரஷ்யாவுடன் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின.

உக்ரைனை தாக்கிய ரஷ்யா
உக்ரைன் மீது போர் தொடுத்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எச்சரிக்கைவிடுத்தன. இருப்பினும் வியாழக்கிழமையன்று அதிகாலையில் திடீரென ரஷ்யா போரைத் தொடர்ந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனும் உலக நாடுகளில் உதவியைக் கோரியுள்ளது.

மோடி பேச்சு
இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட்டு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வலியுறுத்தியிருந்தார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக அறிவித்துள்ளது எனினும்,
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ‘உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியர்கள் பாதுகாப்பு
பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண்பதற்கு அனைத்து தரப்பினரும் கூடிய ஒருங்கிணைந்த நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், உக்ரைனிலிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் புடினிடம் மோடி எடுத்துரைத்தார்.
Recommended Video

மோடியிடம் புடின் உறுதி
உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடலின் போது ரஷ்ய அதிபர் புதின் உறுதி அளித்துள்ளதாக ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளதாக ரஷ்யா வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications