For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐன்ஸ்டைனின் 100 ஆண்டுகால கண்டுபிடிப்பை உறுதி செய்த 3 இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

100 ஆண்டுகளுக்கு முன்னர் ஐன்ஸ்டைன் கண்டறிந்த ஈர்ப்பு விசை அலைகளை உறுதி செய்த 3 விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: ஈர்ப்பு விசை அலைகள் குறித்து உறுதி செய்த மூன்று இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி உள்ளிட்ட துறைகளில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பங்களிப்பை ஆற்றுவோருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.

இதற்கான தேர்வு குழு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ளது. நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதை ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் தேர்வு குழுத் தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்தார். அதன்படி ஜெர்மனியைச் சேர்ந்த ரெய்னர் வைஸ், அமெரிக்காவை சேர்ந்த பேரி சி. பேரிஸ், கிப் எஸ். தோர்ன் ஆகிய மூவருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

100 ஆண்டுகளுக்கு முன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கண்டறிந்த புவிஈர்ப்பு விசை அலைகளை மேற்கண்ட 3 பேரும் உறுதிப்படுத்தினர். சுமார் ரூ.7 கோடி பரிசுத் தொகையில் 50 சதவீதமானது ரெய்னர் வைஸுக்கும், மீதமுள்ள 50 சதவீத தொகையில் மற்ற இரு விஞ்ஞானிகளுக்கு தலா 25 சதவீதம் வழங்கப்படும்.

English summary
The 2017 NobelPrize in Physics is awarded to Rainer Weiss, Barry C. Barish and Kip S. Thorne for observation of gravitational waves which was invented by Albert Einstein before 100 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X