For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட கொரியாவில் ஆபாச படம் பார்த்த சிறுவன்.. வழங்கப்பட்ட கொடூர தண்டனை

Google Oneindia Tamil News

சியோல்: வட கொரியா என்பது உலகின் மிகவும் மர்மான நாடு. இங்கு என்ன நடந்தாலும் வெளிஉலகிற்கு ஒன்றுமே தெரியாது. அதையும் மீறி சில விஷயங்கள் வெளிவருகின்றன.

வடகொரியாவில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் உள்ளது. வடகொரியாவில் உள்ள அரசு ஊடகம் சொல்வது தான் செய்தி என்கிற நிலை உள்ளது.

ஆனால் பக்கத்து நாடான தென்கொரியாவிற்கு வடகொரியாவில் நடக்கும் பல விஷயங்கள் உடனே தெரிந்துவீடும். அந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் தான் அங்கு நடப்பதை உலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்றன.

வடகொரியா

வடகொரியா

அப்படி ஒரு விஷயத்தை தென்கொரிய ஊடகங்கள் அண்மையில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. வடகொரியா நாடு முழுவதும் ஆபாசத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளிகளிலும் ஆபாசத்திற்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. வடகொரியாவில் ஆபாச படம் தயாரிப்பது மற்றும் விற்பது மற்றும் பார்ப்போருககு மரணதண்டனை வரை விதிக்கப்படும். ஆபாச படம் சமூத சீரழிவை ஏற்படுத்தும் என்று அதிபர் கிம் ஜாங் உன் நினைப்பதால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

தண்டனை

தண்டனை

இந்நிலையில் வடகொரியாவில் ஆபாச படத்தை பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவன் பார்த்துள்ளார். இதற்காக அவனுக்கு மட்டுமில்லாமல் அவரது குடும்பத்திற்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆபாச படம் பார்த்த சிறுவனின் ஐபி முகவரியைவைத்து சிறுவனின் இடத்தை கண்டுபிடித்த அவர்கள் கைது செய்தனர்.

மரண தண்டனை இல்லை

மரண தண்டனை இல்லை

ஆபாச படம் பார்த்த குற்றத்திற்காக சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தை நாடு கடத்தி உள்ளார்கள். வடகொரியாவின் எல்லையில் அவர்கள் விடப்பட்டுள்ளார்கள். சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை என்ற போதிலும் சிறுவன் படித்த பள்ளியின் தலைமை ஆசியர்க்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கூலி வேலை

கூலி வேலை

வட கொரியா நாட்டு சட்டத்தின் படி பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் அந்த பள்ளி ஆசிரியர்க்கும் பொறுப்பு உள்ளது என்பதாகும். இதனால் பள்ளி தலைமை ஆசிரியர்க்கு கூலி வேலை செய்யும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

English summary
north korea gives horrible punishment to boy who caught watching porn video on internet. The government of North Korea has launched a campaign against porn across the country. The ruling Workers Party has also launched an awareness campaign against porn in schools. In North Korea, people involved in the production of pornographic material, or involved in buying and selling it, are even given death punishment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X