அடங்க மறுக்கும் வடகொரியா.. பிற நாடுகளை உளவு பார்க்க செயற்கைகோளை ஏவ திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வடகொரியா: ஏவுகணை சோதனைகள் நடத்துக்கூடாது, செயற்கைகோள் ஏவக்கூடாது என்ற ஐநாவின் தடைகளை மீறி வடகொரியா புதிய உளவு செயற்கைகோளை ஏவு உள்ளதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஊர் கட்டுப்பாடுகளை மதிக்காத ஒருத்தன் அனைத்து ஊரிலும் இருப்பது போல, உலக நாடுகளுக்கு அடங்காமல் என்போதும் திமிரிக்கொண்டிருக்கும் நாடு வடகொரியா. ஐ.நாவும், அமெரிக்காவும் எதை எதிர்க்கிறதோ அதை மட்டுமே செய்வது தான் முழுநேர வேலையாக கொண்டுள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்.

North Korea plans to launch a Spy Satellite, Beyond the UN's ban.

ஐநாவின் தடைகளை மீறி பல ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்து உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. வடகொரியாவின் இந்த தொடர் நடவடிக்கையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்கொரியாவுக்கு வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவானது.

தென்கொரியாவுக்கு அமெரிக்காவின் தீவிர ஆதரவு இருப்பதால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டால் அது மூன்றாம் உலகப்போராக மாற வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் தென்கொரியாவில் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வடகொரியா புதிய உளவு செயற்கைகோளை ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பம் கொண்ட அந்த செயற்கைகோள் மூலமாக தேவைப்படுவதை துல்லியமாக படம்பிடிக்க முடியும் என்றும் இதனை உளவு வேலைகளுக்காக பயன்படுத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு தென்கொரியா மற்றும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
North Korea plans to launch a Spy Satellite, Beyond the UN's ban. And World Countries are blaming North Korea's activities might ignite the third world war

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற