நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்த.. ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர்! அங்கதான் ட்விஸ்டே! அதிர்ந்த புடின்
மாஸ்கோ: ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோவிற்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே தகவல்கள் வந்தன. இந்த சம்பவம் தற்போது அதிர வைக்கும் சில தகவல்கள் வந்துள்ளன.
Recommended Video
உக்ரைன் நகரங்கள் பலவற்றில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறி வருகின்றன. உக்ரைன் போரில் இதுவரை ரஷ்யா மிக மோசமான அளவில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது. இதுவரை ரஷ்யாவால் உக்ரைனின் பெரிய நகரம் எதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.
இந்த போரில் கிட்டத்தட்ட ரஷ்யா முதல்கட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவே மேற்கு உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யா
ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோ அதிபர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவர். புடினின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் தலைவர்களில் இவரும் முக்கியமானவர். உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதில் ரஷ்யா கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. இது போக ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியாக போர் தொடுத்துள்ளது.

செர்ஜெய் ஷிகோ
இப்படிப்பட்ட நிலையில்தான் ஒரு நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிகம் தேவைப்படுவார். பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஒவ்வொரு முடிவும், மூவும் அதிக கவனம் பெறும். ஆனால் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோ கடந்த ஒரு மாதமாகவே வெளியே தென்படவில்லை. பொது இடங்களுக்கு அவர் வரவில்லை. மக்களை சந்திக்கவில்லை. செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை.

என்ன ஆச்சு?
இந்த நிலையில்தான் இவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. மீட்டிங் ஒன்றில் இருந்த இவர் சட்டென நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. இவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்தான் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோவிற்கு இயற்கை காரணங்களால் ஹார்ட் அட்டாக் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

சந்தேகம்
அதாவது இவருக்கு செயற்கையான காரணங்களால் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த செயற்கை காரணம் என்ன என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை. முன்னதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோ மீது அதிபர் புடின் கோபத்தில் இருந்ததாகவும், போரில் பின்னடைவு அடைந்தது பற்றி இவரிடம் விளக்கம் கேட்டதாகவும் கூறப்பட்டது. போரில் எப்படி பின்னடைவை சந்தித்தோம்.

கேள்வி மேல் கேள்வி
ஏன் உக்ரைனின் பெரிய நகரங்களை கைப்பற்ற முடியவில்லை என்று புடின் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோவிடம் கேட்டதாக தகவல்கள் வந்தன. அதோடு அங்கு போருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பல்வேறு ஜெனரல்கள் திருடிவிட்டதாகவும் கூறப்பட்டது. இவர்கள் மீது புடின் கோபமாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில்தான் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோவிற்கு இயற்கை அல்லாத வேறு காரணங்களால் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications