For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவுக்கான தூதராக அமெரிக்கா வாழ் இந்தியரான ரிச்சர்ட் வெர்மாவை நியமித்த ஒபாமா!

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக அந்நாடு வாழ் இந்தியரான ரிச்சர்ட் வெர்மாவை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர் அந்நாட்டுக்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி தேவ்யானி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இருநாடுகளிடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அப்போது இந்தியாவுக்கான அமெரிக்காவின் தூதராக இருந்த நான்சி பாவெல் ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கான தற்காலிக அமெரிக்கா தூதராக காத்லீன் ஸ்டெபென்ஸ் தற்போது பணியாற்றி வருகிறார்.

Obama nominates Indian-American as ambassador to India

ரிச்சர்ட் வெர்மா நியமனம்

இந்த நிலையில் இந்தியாவுக்கான புதிய தூதராக அமெரிக்கா வாழ் இந்தியரான ரிச்சர்ட் வெர்மாவை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார்.

1960களில் குடியேறினர்

ரிச்சர்ட் வெர்மாவின் பெற்றோர் 1960களில் அமெரிக்காவில் குடியேறினர்.

ஒபாமா அரசில்..

2008ஆம் ஆண்டு முதல் ஒபாமாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார் வெர்மா. ஒபாமா அரசில் 2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மாநில சட்ட விவகாரங்கள் துறையில் துணைச்செயலாளாராக ரிச்சர்ட் வெர்மா பணியற்றினார். தற்போது தனியார் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

முதல் அமெரிக்கா வாழ் இந்தியர்

அமெரிக்க செனட் சபை ரிச்சர்ட் வெர்மாவின் நியமனத்தை உறுதி செய்தால், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றும் முதல் இந்திய அமெரிக்கர், ரிச்சர்ட் வெர்மாவாக இருப்பார்.

மோடி யு.எஸ். பயணம்

இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க செல்ல உள்ள நிலையில் அமெரிக்க தூதர் நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
President Barack Obama nominated former State Department official Richard Verma as U.S. ambassador to India on Thursday, just ahead of a visit to Washington by new Indian Prime Minister Narendra Modi, a White House statement said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X