For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக மகா அதிபருடன் கூடவே போகும் குடிசை...

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா, வெளிநாடுகளுக்குப் பயணப்படும்போது கூடவே ஒரு குட்டிக் கூடாரத்தையும் அதிகாரிகள் எடுத்துச் செல்கிறார்களாம்.

அதாவது டென்ட் கொட்டாய்தான் அந்த குட்டிக் கூடாரம். இந்தக் குட்டிக் கூடாரம், அதிபர் ஒபாமா ரகசியமாக உட்கார்ந்து ஆலோசனை நடத்துவதற்கும், அமைதியாக விவாதிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறதாம்.

இதை பாதுகாப்பு கருதி ஒபாமா பயணங்களின்போது அமெரிக்க அதிகாரிகள் பயன்படுத்துகிறார்களாம். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கசிந்துள்ளன.

ஹோட்டலுக்குப் பக்கத்தில்

ஹோட்டலுக்குப் பக்கத்தில்

இந்த கூடாரமானது, ஒபாமா தான் போகும் வெளிநாடுகளில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகில் அமைக்கப்படுகிறதாம். அதில்தான் அவர் பெரும்பாலும் முக்கிய ஆலோசனைகளை நடத்துவதிலும், புத்தகம் படிப்பதிலும் கழிப்பாராம்.

முக்கிய விவாதங்கள் இங்குதான்

முக்கிய விவாதங்கள் இங்குதான்

அதேபோல முக்கிய விவாதம் ஏதாவது நடத்த வேண்டியிருநதால், ஹோட்டல் அறையிலிருந்து இந்தக் கூடாரத்திற்கு இடம் பெயர்ந்து விடுவாராம். ரகசியக் கேமராக்கள், ஒட்டுக் கேட்புக் கருவிகள் ஆகியவற்றின் அபாயங்களிலிருந்து தப்பிக்கவும் இந்த உபாயமாம்.

நேச நாடுகளுக்குப் போனாலும் இப்படித்தான்

நேச நாடுகளுக்குப் போனாலும் இப்படித்தான்

அன்னிய நாடுகளுக்குப் போகும்போது மட்டுமல்லாமல் மிகவும் நேசமான நாடுகளுக்குப் போனாலும் கூட இந்தக் கூடாரத்தையும் தூக்கிக் கொண்டு போய் விடுகிறார்களாம். யாரையும் நம்புவதில்லையாம் அமெரிக்க அதிகாரிகள்....

யாரா இருந்தா என்ன

யாரா இருந்தா என்ன

இதுகுறித்து அமெரிக்க மத்திய உளவுப்பிரிவின் இயக்குநரான ஜேம்ஸ் உல்ஸி என்பவர் கூறுகையில், இப்போதெல்லாம் யாரையும் நம்ப முடியாது. எனவே அதிபரின் பாதுகாப்பு, ரகசியங்களைக் காப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. எனவேதான் இந்த கூடார யோசனையை அமல்படுத்தியுள்ளோம் என்றார்.

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி கடைசியில் குடிசைக்கு வந்துதான் ஆக வேண்டும் போல...

English summary
When President Barack Obama travels abroad, his staff packs briefing books, gifts for foreign leaders and something more closely associated with camping than diplomacy: a tent. Even when Obama travels to allied nations, aides quickly set up the security tent — which has opaque sides and noise-making devices inside — in a room near his hotel suite. When the president needs to read a classified document or have a sensitive conversation, he ducks into the tent to shield himself from secret video cameras and listening devices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X