For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரு மகள்களையும் குறைந்த ஊதிய வேலைக்கு அனுப்ப ஆசைப்படும் ஒபாமா தம்பதி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான ஒபாமா தனது இரு குழந்தைகளும் மிகக் குறைந்த ஊதியத்திலான பணிக்கு செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஏனெனில் அதன் மூலமாகத் தான் அவர்கள் தங்களது குணாதிசயங்களை சரியாக உருவாக்கிக் கொள்ள இயலும் என நம்புகிறாராம் ஒபாமா.

அமெரிக்க அதிபரான ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் பெயர் மலியா மற்றும் சாஷா.

பொதுவாக பெரும் பதவியில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மிகவும் சவுகர்யமாக, வசதியாக வாழ வைக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால், அவர்களிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டு இருக்கின்றனர் ஒபாமாவும், அவரது மனைவியும்.

தங்களது அதிகாரம், செல்வாக்கு மற்றும் வசதியின் நிழல் தங்களது குழந்தைகளின் மீது பட்டு விடாமல், அவர்களது எதிர்காலத்தை அவர்களே நிர்ணயம் செய்யும் வகையில் வளர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர் அவர்கள்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர் ஒபாமாவும், அவரது மனைவியும். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடின உழைப்பின் சுவை...

கடின உழைப்பின் சுவை...

ஒவ்வொரு குழந்தை கடின உழைப்பின் சுவை என்னவென்றது அதுவே உழைத்து உணர வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதன் மூலமாகவே வாழ்க்கையின் ருசியை அவர்கள் உணர இயலும்.

எங்கள் விருப்பம்...

எங்கள் விருப்பம்...

எங்கள் குழந்தைகளுக்கு கடின உழைப்பை கற்றுக் கொண்டு வாழவே நாங்கள் விரும்புகிறோம். ஊதியம் குறைவானதாக இருந்தாலும், அதன் மூலம் அவர்களது தங்களது எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

வாய்ப்புக்காக...

வாய்ப்புக்காக...

அத்தகைய வாய்ப்புகள் அவர்களுக்கு உருவாக வேண்டும் என ஆவலாகக் காத்திருக்கிறோம். ஏனெனில் உழைப்பிற்கான ஊதியம் எப்போதும் வேடிக்கையானதாக இருக்கக் கூடாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்துள்ள ஊழியர்கள்...

குறைந்துள்ள ஊழியர்கள்...

அமெரிக்க தொழிலாளர்கள் குறித்த புள்ளி விபரம், கடந்த 1999ம் ஆண்டு 52 சதவீதமாக இருந்த 16 முதல் 19 வயது வரை உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 32 சதவீதமாக குறைந்துள்ளதாகக் கூறுகிறது.

ஐஸ் விற்ற ஒபாமா...

ஐஸ் விற்ற ஒபாமா...

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வாலிப வயதில் ஐஸ்க்ரீம் கடையிலும், அவரது மனைவி மிஷல் புத்தக பைண்டிங் தொழிலும் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
President Obama and First Lady Michelle say they want their privileged daughters to work minimum-wage jobs because it builds character.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X