For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லை மீறும் “எல் நினோ” – ஆசியாவை சூழ்ந்துள்ள அபாயம்

Google Oneindia Tamil News

சிட்னி: பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை மாற்றமானது, அக்கடல் மட்டத்தில் நீரின் வெப்பநிலையை அதிகரித்துள்ளது.

இதனால், இந்த வருடத்தில் "எல் நினோ" தான் மிகப்பெரிய இயற்கை அழிவாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய இயற்கை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எல் நினோவால் ஆசியக் கண்டமே பெரும் இயற்கைப் பேரிடர்களைச் சந்திக்கலாம் என்று தெரிகின்றது.

Ocean data points to strong El Nino: Climate scientist

புயல் அபாயம்:

எல் நினோவானது கடல் நீர் வெப்பநிலையை உயர்த்துவதன் மூலம், காற்றின் போக்கை பெருமளவில் மாற்றி அமைக்கும்.மேலும், பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கும், புயலுக்கும் வழி வகுக்கும் எனத் தெரிகின்றது.

உணவு ஆதாரம் பாதிப்பு:

மக்களின் உணவு ஆதாரமானது இந்த காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படும்.எப்போதும் வருடத்தின் நடுவில் ஏற்படும் இந்தநிலை தற்போது மிக முன்னதாகவே ஏற்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு:

"கடந்த வருடங்களை விட, இந்த வருட "எல் நினோ" அதிக அளவில் பசிபிக்கின் வெப்பநிலையை அதிகரித்துள்ளது.இதனால், மிகப்பெரும் சேதங்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்று வெஞ்சு கேய் என்ற காலநிலை ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.

தட்டுப்பாடு:

இந்த கடுமையான காலநிலை மாற்றத்தால் ஆசியக் கண்டத்தில் பல்வேறு வகையான உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு உண்டாகும் பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

English summary
A spike in Pacific Ocean sea temperatures and the rapid movement of warm water eastwards have increased concerns that an El Nino weather pattern this year could be one of the strongest in several decades, an Australian climate scientist said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X