சிந்து நதி நீர் இல்லாமல் தவிக்கும் பாகிஸ்தான்.. என்ன இந்த லெவலுக்கு இறங்கிட்டாங்க! இல்லைனா பாலைவனம் தான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது முதலே பாகிஸ்தான் அச்சத்தில் இருக்கிறது. சில காலம் இதை நிலை தொடர்ந்தால் தண்ணீர்ப் பஞ்சத்தால்.. நிலைமை மோசமாகும் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும். இதனால் கிடைக்கும் இடத்தில் எல்லாம் இது குறித்து பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் பேசியே வருகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக உண்மையாக நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.

India Pakistan Indus water

பாகிஸ்தானுக்குச் சிரமம்

இந்தியாவின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையே சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் இந்தியா செயல்படுத்த வேண்டும் என்று இந்தியாவிடம் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. சர்வதேச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருப்பதையே காட்டுவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. சிந்து நதிகளில் இந்தியா திட்டமிட்டிருந்த இரு திட்டங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்து பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியிருந்தது. இது தொடர்பான விசாரணை முடிந்து ஜூன் கடைசி வாரம் சர்வதேச நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை அளித்திருந்தது.

இந்தியா திட்டவட்டம்

ஆனால், சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இந்தியா அங்கீகரிக்கவில்லை. இந்தியா கடந்த வாரம் இந்தத் தீர்ப்பைத் திட்டவட்டமாக நிராகரித்தது. கிஷன்கங்கா மற்றும் ராட்டில் நீர்மின் திட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தான் எழுப்பிய ஆட்சேபணைகள் மீதான தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என வெளியுறவுத் துறை குறிப்பிட்டது.

மீண்டும் மீண்டும் கேட்கும் பாகிஸ்தான்

இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "சிந்து நதிநீர் ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்றும் அது இன்னும் செயல்பாட்டில் தான் இருக்கிறது என சர்வதேச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியா ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்க எந்த உரிமையும் இல்லை என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டையே இது காட்டுகிறது.

எனவே, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தவும், அதன் ஒப்பந்தத்தில் உள்ள விஷயங்களை முழுமையாக நிறைவேற்றவும் இந்தியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது.

திமிர் பேச்சு

அதேபோல பாகிஸ்தான் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரும் இந்த விவகாரத்தை எழுப்பியிருந்தார். இது தொடர்பாக அவர், "சிந்து நதி நீர் ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்பதையே இது உறுதிப்படுத்தியுள்ளது. கிஷன்கங்கா-ராட்டில் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாகிஸ்தான் வரவேற்கிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் முழுமையாகச் செல்லுபடியாகும் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. இந்தியாவால் ஒருதலைப்பட்சமாக அதை நிறுத்தி வைக்க முடியாது" என்றார்.

இந்தியாவின் நிலைப்பாடு

இதில் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இந்தியா இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகக் கூறியது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் இதைக் கூறவில்லை. மாறாகப் பல மாதங்களுக்கு முன்பே இந்தியா சிந்து நதிகளில் சில திட்டங்களை மேற்கொள்ள இருந்தது. அதைத் தடுக்க பாகிஸ்தான் எடுத்த முயற்சியே இந்த வழக்காகும்.

சிந்து நதி நீரை நம்பியே பாகிஸ்தானின் பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்கள் உள்ளன. அது இல்லாமல் போனால் பாகிஸ்தான் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும். இதன் காரணமாகவே தொடர்ச்சியாக அது குறித்துப் பேசி இந்தியாவைச் சம்மதிக்க வைக்க முயல்கிறது. ஆனால், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடந்த பிறகு இந்த ஒப்பந்தத்தை மீண்டும் கொண்டு வர முடியாது என்பதில் இந்தியா திட்டவட்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+