For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவ, மாணவிகள் அருகருகே அமர்ந்தால், சேர்ந்து நடந்தால் அபராதம்: பாக். பல்கலைக்கழகம்

By Siva
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பல்கலைக்கழகம் மாணவர்களும், மாணவிகளும் அருகருகே அமர்ந்தால், ஒன்றாக நடந்து சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் படுங்க்வா மாகாணத்தில் உள்ளது ஸ்வாட் பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் வெளியாகியுள்ள அறிவிப்பால் மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Pakistan university bans boys and girls sitting, walking together

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்திலோ, வெளியிலோ அருகருகே அமரக் கூடாது, சேர்ந்து நடந்து செல்லக் கூடாது. மீறி நடந்து கொண்டால் ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். விதிகளை மீறுபவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள என்.யு.எஸ்.டி. பல்கலைக்கழகம் மாணவிகள் கண்டிப்பாக துப்பட்டா அணிய வேண்டும், ஜீன்ஸ் அணிந்து வரக் கூடாது என்று அறிவித்தது.

English summary
Swat university in Pakistan has announced that boys and girls sitting and walking together will face fine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X