மட்டன் சமைக்க மறுத்த மனைவியை அடித்துக்கொன்ற கணவனுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
நியூயார்க்: அமெரிக்காவில் ஆட்டுக்கறி குழம்பு சமைத்து தர மறுத்த மனைவியை இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்ற கணவனுக்கு சுப்ரீம்கோர்ட் 25 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்தவர் நூர் ஹூசைன் (வயது 75) இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.கடந்த 2011 ஆம் ஏப்ரல் 2 ந்தேதி தனது 66 வயது மனைவி நாசர் ஹூசைனிடம் இரவு சாப்பிடுவதற்கு மட்டன் குழம்பு வைத்து தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு நாசர் மறுப்பு தெரிவித்து பாகிஸ்தானின் பருப்பு டிஷ் செய்யப்போவதாக கூறி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஹூசைன் இரும்பு கம்பியால் மனைவியை தாக்கி உள்ளார் இதில் நாசர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யபட்ட நூர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் புர்ருக்லீன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.












Click it and Unblock the Notifications