உக்ரைன் ரஷ்யா இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை - போர் முடிவுக்கு வருமா
ரஷ்யா உக்ரைன் இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
கீவ்: உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான மூன்றாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற வாய்ப்புள்ளதாக உக்ரைன் அதிபரின் அதிகாரியை மேற்கோள் காட்டி உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24 ஆம் தேதி நுழைந்த ரஷ்ய ராணுவம், தலைநகர் கிவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. ரஷ்யாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிவதால் உக்ரைன் உருக்குலைந்து போயுள்ளது.

சில இடங்கள் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. பல லட்சம் பேர் நாடுகளை விட்டு வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இந்திய மாணவர்கள் பலரும் ஆபரேசன் கங்கா மீட்பு நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்டு நாடு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள், பெலராஸில் இருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதலாவதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், 2வது பேச்சுவார்த்தையில் மனிதாபிமான முறையில் சில நடவடிக்கைகள் முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இருநாடுகளுக்கு இடையிலான 10வது நாளில், உக்ரைனின் இரண்டு முக்கிய நகரங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மீண்டும் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. நேட்டோ உறுப்பு நாடுகள் உதவ முன்வராததால் ரஷ்யப் படைகள் தனது விமானத் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. இன்று முதல் இறக்கும் ஒவ்வொரு மக்களும் மக்களும் உங்களால் இறந்ததாக கருதுகிறோம்' என்று கூறப்பட்டது.
இதுவரை 1.45 மில்லியன் மக்கள், உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்வு அமைப்பின் கூற்றுப்படி, 7,87,300 அகதிகள் போலந்துக்கும், 228,700 பேர் மால்டோவாவிற்கும், 144,700 பேர் ஹங்கேரிக்கும், 132,600 பேர் ருமேனியாவிற்கும் 100,500 பேர் ஸ்லோவாக்கியாவிற்கும் சென்றுள்ளனர். உக்ரைனில் குறைந்தது 351 மக்கள் கொல்லப்பட்டதாகவும், 707 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன
இந்த சூழ்நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரி டேவிட் தெரிவித்துள்ளார். எனினும், எந்த இடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications