For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள்

By Siva
Google Oneindia Tamil News

பெர்த்: ஆஸ்திரேலியாவில் சக பயணி ஒருவரின் கால் ரயிலுக்கும், பிளாட்பார்முக்கும் இடையே சிக்கியதால் பயணிகள் ரயிலையே சாய்த்துள்ளனர்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் ஒருவர் ரயிலில் ஏற முயன்றபோது அவரது கால் ரயிலுக்கும், பிளாட்பார்முக்கும் இடையேயான 5 செமீ இடைவெளியில் சிக்கியது. இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

People Power: Passengers tilt train to save trapped man in Perth

அந்த நபரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். இதையடுத்து ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்த சுமார் 50 பேர் சேர்ந்து ரயிலை ஒருபுறமாக சாய்த்தனர். ரயிலை சாய்த்து அவர்கள் அந்த நபரை பத்திரமாக மீட்டனர். காலில் காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று அடுத்த ரயிலில் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு கிளம்பினார்.

ஒரு பயணியை காப்பாற்ற பொதுமக்கள் ரயிலை சாய்த்த சம்பவம் இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/nZx4MichXXE?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary
A group of commuters tilted a train in western Australia to save a man whose leg got trapped between a train and a platform.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X