விமானத்தில் குண்டுப்பெண் என தொல்லை கொடுத்தவரை வறுத்தெடுத்த மாடல் அழகி!

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

விமான பயணத்தில், கூடுதல் உடல் பருமன் குறித்து கேலி செய்து “அர்த்தப்படுத்தியும் அசிங்கமாகவும்” செய்தி அனுப்பிய நபரோடு நேருக்கு நேர் சண்டையிட்ட காரணத்திற்காக அமெரிக்க மாடல் ஒருவர் பரவலாக பாரட்டப்பட்டு வருகிறார்.

புகைப்பட ஒளிப்பதிவிற்காக லாஸ் ஏஞ்சலிஸ் சென்ற நட்டாலி ஹேஜ் இது குறித்து கூறுகையில், என்னுடைய கூடுதல் எடையின் காரணமாக விமானம் மேலெழும்பி பறக்காது என்று தனது அருகில் இருந்த நபர் அவரது நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிவித்தார்.

Plus-size model confronts man over 'fat-shaming' during flight

மேலும் அவர், “அந்த பெண் ஒரு மெக்சிகோகாரரையே உண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்” என்றும் அவருடைய நண்பருக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

பின்னர் தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்ட அவர், விமானத்தில் ஏறுவதற்கு முன் சிறிதளவு மது அருந்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழனன்று நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் ஹேஜ் பகிர்ந்தார். அதன் பின்னர் பகிரப்பட்ட அந்த வீடியோ காட்சி மில்லியன் பார்வையாளர்களுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.

தன்னைப்பற்றி குறிப்பிடும் போது, “விமான பயணத்தின் மீது மிகவும் அச்சம் கொண்டவர்” என்று தெரிவித்த ஹேஜ், “கூடுதல் இடத்திற்காக 70 டாலர்கள் செலுத்தியுள்ளார். ஏனெனில் எனது காலை வைப்பதற்கு கூடுதல் இடம் தேவை என்பது எனக்குத் தெரியும்” என்றும் ஹேஜ் தெரிவித்துள்ளார். இருப்பினும் நடுவில் இருந்த இருக்கை மட்டுமே கிடைத்தது.

“நான் இருக்கையில் அமர்ந்தவுடன், எனது இடப்பக்கம் அமர்ந்திருந்த நபர் குரலை உயர்த்தியும், பெருமூச்சு விட்டும், தனது இருக்கையில் அமர்ந்தபடியே தன்னை சரிசெய்து கொள்ள துவங்கியதாகவும்” இன்ஸ்டாகிராம் பதிவில் அந்த பெண் எழுதியிருந்தார்.

இதன் பின்னர், அவருடைய நண்பருக்கு தன்னைப் பற்றி செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்ததை தான் கவனித்ததாகவும், ஹேஜ் கூறியுள்ளார்.

[செய்தியை பெற்ற நபர்] அந்த பெண் மெக்சிக்கன் உணவை உண்டிருக்கமாட்டார் என்று நம்புவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார். அதற்கு பதிலனுப்பும் போது, அந்த பெண் ஒரு மெக்சிகோவைச் சேர்ந்த ஒருவரையே முழுதாத உண்டிருப்பதாக நினைக்கிறேன் என்று விமானத்தில் இருந்த நபர் பதிலளித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், இருக்கையின் ஓரத்தை நோக்கி நான் தள்ளப்பட்டிருப்பதால் எனது கழுத்தின் அச்சு விமானத்தின் ஜன்னலில் பதிந்துள்ளது என்றும் தனது நண்பருக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தனது வலது புறம் இருந்த பயணியிடம் தான் நடந்ததைக் கூறி, இருக்கையை மாற்றிக்கொள்ளுமாறு கோரியும், அவர் சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் மட்டுமல்ல உடல் பருமனாக இருப்பவர் தினசரி எதிர்கொள்ளும் யதார்த்த நிலை இதுதான். பேருந்தில் பயணிக்கும் போது, கடைகளில் வரிசையில் நிற்கும் போது, கச்சேரிகளில் கலந்து கொள்ளும் போது, இணையதளங்கள் உள்ளிட்ட இடங்களிலும் இது நடைபெறும். உங்களுக்கே உரிய இடத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நீங்கள் இருந்தாலும், மக்கள் உங்களை கேலி செய்து மனதை காயப்படுத்துவார்கள்.

நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான், நீங்கள் உயிருடன் இருப்பதாலேயே எந்த தவறும் செய்யவில்லை என்பதை உணர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார் அவர்.

இதன் பின்னர், குறிப்பிட்ட அந்த பயணியுடன் நேருக்கு நேர் சண்டையிட்ட அந்த பெண், அதை முகநூலில் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார். குறிப்பிட்ட பதிவு ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், அந்த நபர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஆனால், விமானத்தின் அவசர காலத்தில் வெளியேறும் பாதையில் உள்ள இருக்கையில், மக்களுக்கு அவரால் உதவி செய்ய முடியாத காரணத்தால் அந்த வரிசையில் அவர் அமரக்கூடாது என்றும், அந்த பயணி தெரிவித்துள்ளார்.

அவருடைய நண்பருக்கு அனுப்பிய செய்திகளில் ஒன்றை அந்தப் பெண் சுட்டிக்காட்டியபோது, அவர் வெறுமனே சிரித்தார். “இதுபோன்று வேறு யாரையும் இனிமேல் நடத்த வேண்டாம்” என்று அந்தப் பெண் அவரிடம் எச்சரித்தார்.

தைரியமான பெண்ணாக செயல்பட்ட ஹேஜ் முகநூலில் பரவலாக பாரட்டப்பட்டு வருகிறார்.

அதிகபட்ச ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?

பிற செய்திகள்

BBC Tamil
English summary
A plus-size US model has been widely praised for confronting a passenger accused of sending "mean and ugly" messages about her during a flight.
Please Wait while comments are loading...