பார்த்திபன் சம்சாரம் கோரிக்கை.. உருட்டோ உருட்டென்று உருட்டியவர்களுக்கு கே.பி. ராமலிங்கம் நச் பதில்
சென்னை: திரிஷா - பார்த்திபன் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், அது குறித்து ஆதரவு எதிர்ப்பு கருத்துகள் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன.. இப்படிப்பட்ட சூழலில், பாஜக மூத்த தலைவர் கேபி ராமலிங்கம் தெரிவித்துள்ள கருத்துக்கள் அதற்கு மேல் பரபரப்பை கூட்டி வருகிறது. நயினார் நாகேந்திரன் திரிஷா பற்றி பேசியது குறித்து தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.. என்ன நடந்தது?
நடிகை திரிஷாவை சுற்றி கடந்த சில நாட்களாக உருவாகியுள்ள சர்ச்சை இன்னும் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. இந்த விவகாரத்தில் பல கட்டங்களாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன..

பார்த்திபன் - திரிஷா
சமீபத்தில் நடிகை திரிஷா பற்றி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு கருத்தைக் கூறியிருந்தார்.. அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஒரு பெண்ணைப் பற்றி, அதுவும் ஒரு முன்னணி நடிகையைப் பற்றி பொதுவெளியில் இத்தகைய கருத்துக்கள் பகிரப்படுவது தவறானது என சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன..
இதையடுத்து நடிகை திரிஷாவும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி கண்டனம் தெரிவித்தார்.. அவரது இந்த பதில் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது..
இந்த விவகாரம் அதிகமாக பேசப்பட்ட நிலையில், பிறகு நயினார் நாகேந்திரன் தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறி மன்னிப்பும் கேட்டார்.. இதன் மூலம் அந்த கட்டம் ஒரு வகையில் முடிவுக்கு வந்தது..
பாஜக கேபி ராமலிங்கம்
அதற்குப் பிறகு நடிகர் பார்த்திபன் வெளியிட்ட ஒரு கருத்து மீண்டும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியது.. அந்த கருத்தும் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.. பார்த்திபன் கூறிய கருத்துக்கு நடிகை திரிஷா மீண்டும் தனது கண்டனத்தை தெரிவித்தார்.. இதனால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பாக மாறியது..
அதற்கு பிறகும் பார்த்திபன் தனது கருத்தை விளக்கி மீண்டும் பேசியிருப்பது, இந்த விவகாரம் சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது..
இந்த நிலையில் தான் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசினார்..
நயினார் நாகேந்திரன்
அப்போது அவர் கூறியதாவது: "திரிஷா குறித்து நயினார் சொன்னபோது சிலர், ஏதோ இல்லாததை சொன்னது போல இவர்கள் எல்லாம் போட்டு உருட்டோ உருட்டென்று உருட்டினார்கள்.. இப்போது அவரது சம்சாரமே, 'என் புருஷனை காப்பாத்துங்க' என்று கோரிக்கை வைத்துள்ளார்.. எனவே மீடியாக்கள் நாங்கள் சொல்லும் கமென்ட்டுகளை எடுத்துப் போடுவதை விட்டுவிட்டு வேறு வேலைகளை பார்க்க வேண்டும்..
நயினாருக்கு நான் போட்ட பதிவும் எனது அனுபவத்திற்கும் வயதுக்கும் நான் வழங்கிய அட்வைஸ் தான்.. அதில் அதிருப்தியெல்லாம் யாருக்கும் இல்லை.. நாங்கள் அமைத்துள்ளது மிகப்பெரிய கூட்டணி.. ஆட்சி மாற்றத்திற்கு இந்த பெரிய அணியே போதுமானது.. அதை விட்டு விட்டு ஆந்திராவில் பேசினார்கள்.. தொடர்ந்து பேசுகிறார்கள் என்று தகவல்களை போடுவதை ஏற்க முடியாது.." என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான விமர்சனங்கள் மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், கே.பி. ராமலிங்கத்தின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது..
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications