For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரலாறு படைத்தது "நியூ ஹாரிஸான்ஸ்".. ப்ளூட்டோ கிரகத்தை கடக்க ஆரம்பித்தது!

Google Oneindia Tamil News

நியூயார்க்: நாசாவால் ப்ளூட்டோ ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது திட்டமிட்டபடி ப்ளூட்டோ கிரகத்தின் மிக நெருக்கமான பகுதியை இன்று மாலை இந்திய நேரப்படி 5.45 மணிக்கு அடைந்தது. தற்போது அது ப்ளூட்டோ கிரகத்தின் மீது பறந்து கொண்டுள்ளது.

ப்ளூட்டோ கிரகமானது உறைநிலையில் உள்ள குட்டி கிரகமாகும். சூரியக் குடும்பத்திலிருந்து இது 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கிரகங்களில் ஒன்றாக இருந்த இதை பின்னர் விஞ்ஞானிகள் தகுதி நீக்கம் செய்து விட்டனர்.

இந்த கிரகத்தைக் குறித்து ஆராய, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கடந்த 2006ம் ஆண்டு நியூ ஹாரிஸான்ஸ் என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் ஏவியது.

ப்ளூட்டோ மீது பறக்கிறது...

ப்ளூட்டோ மீது பறக்கிறது...

சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் பயணம் செய்து ப்ளூட்டோவை அடைந்துள்ளது இந்த விண்கலம். இந்திய நேரப்படி இன்று மாலை 5.45 மணிக்கு மணிக்கு, 12,500 கிலோ மீட்டர் வேகத்தில் ப்ளூட்டோவின் மிக நெருங்கிய பகுதியை அடைந்து அதன் மீது பறந்து கடக்க ஆரம்பித்தது.

7800 மைகள் தொலைவில்...

7800 மைகள் தொலைவில்...

தற்போது இந்த விண்கலமானது ப்ளூட்டோவின் தரைப்பரப்பிலிருந்து சுமார் 7,800 மைல்கள் தொலைவில் இருப்பதாக நியூ ஹாரிஸான்ஸ் விண்கலத் திட்ட இயக்குநர் கிளன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான புகைப்படங்கள்...

நூற்றுக்கணக்கான புகைப்படங்கள்...

அடுத்து, ப்ளூட்டோ குறித்த நூற்றுக்கணக்கான புகைப்படங்களை விண்கலம் எடுக்க உள்ளது. மேலும், ப்ளூட்டோவின் மிகப்பெரிய நிலவான சரோனையும், மீதியுள்ள மற்ற 4 குட்டி நிலவுகளையும் அது புகைப்படம் எடுத்து அனுப்ப உள்ளது.

புதிய தகவல்கள்...

புதிய தகவல்கள்...

இந்தப் புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் மூலம் ப்ளூட்டோவின் தரைப்பகுதி, தட்பவெப்பம் குறித்து அறிந்து கொள்ள இயலும் என கிளன் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிகள் ஆர்வம்...

விஞ்ஞானிகள் ஆர்வம்...

நியூ ஹாரிஸான்ஸ் சேகரிக்கவுள்ள ப்ளூட்டோ குறித்த தகவல்கள் சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகே பூமிக்கு வரும். எனவே, இன்று நள்ளிரவுக்கு மேல் ப்ளூட்டோ குறித்த பல புதிய அரிய தகவல்கள், படங்கள் கிடைக்கும் என நாசா விஞ்ஞானிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

முதல் மனித விண்கலம்...

முதல் மனித விண்கலம்...

ப்ளூட்டோவுக்கு விஜயம் செய்யும் முதல் மனித விண்கலம் நியூ ஹாரிஸான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The New Horizons spacecraft reached its closest point to Pluto at 7:49 a.m ( EDT) this morning. A live stream computer simulation showed the probe pass by and continue on past the icy world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X